டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்தநாளைப் போற்றும் நிகழ்வாக சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிறப்புப் பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
அக்டோபர் 15ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் கலந்துகொள்கிறார்.
புலவர் இரா. சண்முகவடிவேல் பட்டிமன்றத்திற்குத் தலைமை ஏற்கிறார். ‘கலாம் ஐயாவின் பெரும்புகழுக்குக் காரணம் அறிவியல் சாதனையா? அல்லது மனிதாபிமானப் பண்பா?’ என்பதே பட்டிமன்றத்தின் தலைப்பு.
அறிவியல் சாதனையே என்று முனைவர் இரா. அன்பழகன் (தமிழகப் பட்டிமன்றப் பேச்சாளர்) செல்வி கண்ணன் வைஷ்ணவி, முத்துகுமார் மகிஷா ஆகியோரும், மனிதாபிமானப் பண்பே என்ற தலைப்பில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், செல்வி தக்ஷினி முத்துகுமார், செல்வன் காமேஷ்வரன் ஆகியோரும் பேசவிருக்கிறார்கள்.
தீபாவளியின் சிறப்பு நிகழ்ச்சியாகவும் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வை முனைவர் ராஜிஸ்ரீநிவாசன் வழிநடத்துகிறார்.
நிகழ்வுக்கு அனுமதி இலவசம். மேல் விவரம் அறிய திரு ஆனந்தன் 96436427, ரஜித் 90016400 ஆகியோருடன் தொடர்புகொள்ளவும்.

