சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் அதன் செயலவை உறுப்பினர் கு.சீ. மலையரசி எழுதிய ‘முகிழ்’, ‘கலர் பென்சில்’ எனும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியீடு காணவிருக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16வது தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் அந்த வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மதியுரைஞருமான இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரான முனைவர் இரா. காமராசு சிறப்புரை ஆற்றுகிறார்.
எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியனும் மூத்த எழுத்தாளர் பொன். சுந்தரராசும் வாழ்த்துரை வழங்குவர்.
எழுத்தாளர் கழகச் செயலாளர் பிரேமா மகாலிங்கம் முகிழ் நூலையும் எழுத்தாளர் இராம.வயிரவன் கலர் பென்சில் நூலையும் அறிமுகம் செய்கின்றனர்.
எழுத்தாளர் கழகப் பொருளாளர் திருவாட்டி மணிமாலா மதியழகன் வரவேற்புரை ஆற்ற இறுதியாக நூலாசிரியர் திருவாட்டி மலையரசி ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றுவார்.
எழுத்தாளர் கழகச் செயலவை உறுப்பினர் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றுவார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.