நவம்பர் 5ஆம் தேதி பெரியார் விழா 2023

நவம்பர் 5ஆம் தேதி பெரியார் விழா 2023

1 mins read
e72b2273-0e21-41c4-9988-1d3646ce7dd7
படம்: - தமிழ்முரசு

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் விழா 2023, நவம்பர் மாதம் 5ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

‘இந்தியாவின் நிலவு மனிதர்’ என்றும் ‘விண்வெளி விஞ்ஞானி’ என்றும் சிறப்பிக்கப்படும் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்.

விழாவின் சிறப்பு அம்சமாக கல்வியாளர், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் பொன். சுந்தரராசுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்படும். மேலும், தமிழ்மொழிப் போட்டிகள் 2023ல் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்