தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் திறன்களை வெளிப்படுத்திய நிகழ்ச்சிகள்

2 mins read
e7cdeedb-490b-4c30-aa91-dc218535a346
டிசம்பர் 22 ‘டேர்’ விழாவில் ‘ஏடிஎச்டி’ எனும் கவனக் குறைபாடும் ‘ஆட்டிசம்’ எனும் தொடர்புத்திறன் குறைபாடும் கொண்ட கலைஞர் முகமது அர்ஷட் ஃபவாஸ், தன் வாழ்க்கைக் கதையையும் பன்மொழிப் பாடல்களையும் படைத்தார். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் திறன்களைப் பொதுமக்களிடம் வெளிக்காட்ட டிசம்பரில் இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பலதரப்பட்ட திறன்களை வெளிக்காட்டிய ‘டேர்’ விழா

டிசம்பர் 22ஆம் தேதி ‘ஸ்கேப்’ அரங்கில் நடைபெற்ற ‘டேர்’ விழாவில், ஒற்றைக் கை மாயவித்தைக்காரர், சக்கர நாற்காலி ஓவியர், குரலை இழந்த ஓவியர், கேட்கும் திறனில் குறைபாடுள்ள பியானோ வாசிப்பாளர், கண் தெரியாத பாடகர் எனப் பலரும் பங்குபெற்றனர்.

‘டேர்’ விழாவில் பங்குபெற்ற ஒற்றைக் கை மந்திரவாதி ஜேக்கி சியோன்.
‘டேர்’ விழாவில் பங்குபெற்ற ஒற்றைக் கை மந்திரவாதி ஜேக்கி சியோன். - படம்: ரவி சிங்காரம்

கண் குறைபாடுள்ளோர் சங்கத்தினர் வழங்கிய உடற்பிடிப்புச் சேவை, ‘சேல்வேஜ் கார்டன்’, ‘எஸ்ஜி எனேபல்’ வழங்கிய சிறப்புத் தேவையுடையோர்க்கான தொழில்நுட்பங்கள், பலகை விளையாட்டுகள் எனப் பல சாவடிகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

‘சேல்வேஜ் கார்டன்’, சிறப்புத் தேவையுடையோர்க்கான தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை பொங்கோல் நூலகத்தில் பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளலாம்.
‘சேல்வேஜ் கார்டன்’, சிறப்புத் தேவையுடையோர்க்கான தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை பொங்கோல் நூலகத்தில் பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளலாம். - படம்: ரவி சிங்காரம்

அதிபரின் நட்சத்திர விருது விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவருடைய துணைவியாரும் வாசித்த கவிதையை எழுதிய ஸ்டெஃபனி எஸ்தர் ஃபாம் படைத்த குறுநாடகமும் ‘டேர்’ விழாவில் இடம்பெற்றது.

ஸ்டெஃபனி 18 ஆண்டுகளாக எழுதிய ‘ஷேட்ஸ்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் இவ்விழாவில் விற்பனையானது. மேல்விவரங்களுக்கு: https://collectivep.com/product/shades-poetry-book-shop/

அர்ஷட் தான் இயற்றிய பாடலைப் படைத்தபோது பார்வையாளரின் கண்ணில் வழிந்த நீரே அவரது பாடலின் வெற்றி.
கலைஞர் அர்ஷட் ஃபவாஸின் தாயார் மெஹரூன்.

விழாவில் வேற்றுமைகள், நீதி, சமத்துவம் ஆகிய கருப்பொருள்களில் அமைந்த குறும்படங்களும் திரையிடப்பட்டன.

விழாவின் நிறைவு அங்கமாக இரவில் ‘பிரிட்ஜஸ்’ இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது. அதில் இந்திய ஊழியர் விஜய் கவிதை வாசித்தார். சிறப்புத் தேவைக் கலைஞர்கள் பலரும் இடம்பெற்றனர்.

பார்வையற்ற கலைஞரும் ‘கலெக்டிவ் பர்ஸ்பெக்டிவ்ஸ்’ சமூகநோக்கு நிறுவனத்தின் பொது மேலாளருமான லிம் லீ லீ இவ்விழாவைத் தொகுத்து வழங்கினார்.

‘இன்க்லுசிவிட்டி ஃபார் ஆல்’ இசைநிகழ்ச்சி

‘இன்க்லுசிவிட்டி ஃபார் ஆல்’ எனும் சமூகநோக்கு நிறுவனத்தைத் தன் தாயாருடன் கொவிட்-19 தொற்றுக்காலத்தில் தொடங்கிய முகமது அர்ஷட் ஃபவாஸ், 26, அதன்வழி கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்பது இணையவழி இசை நிகழ்ச்சிகளை வழங்கி, சிறப்புத் தேவையுடையோர் தம் திறன்களை வெளிக்காட்ட ஒரு தளத்தை வழங்கியுள்ளார்.

டிசம்பர் 15ஆம் தேதி, முதன்முறையாக நேரடி இசைநிகழ்ச்சியை வழங்கியது ‘இன்க்லுசிவிட்டி ஃபார் ஆல்’. மரின் பரேட் சென்ட்ரலில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்புத் தேவையுடைய கலைஞர்கள் 12 பேர் நிகழ்ச்சி படைத்தனர்.

‘இன்க்லுசிவிட்டி ஃபார் ஆல்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்புத் தேவையுடைய கலைஞர்களுடன் சிறப்பு விருந்தினரான நாடாளுமன்ற நாயகரும் மரின் பரேட் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சியா கியென் பெங்.
‘இன்க்லுசிவிட்டி ஃபார் ஆல்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்புத் தேவையுடைய கலைஞர்களுடன் சிறப்பு விருந்தினரான நாடாளுமன்ற நாயகரும் மரின் பரேட் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சியா கியென் பெங். - படம்: சியா கியென் பெங்.

நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்பட்ட ஏறத்தாழ $2,000 ரொக்கம், பள்ளியிலிருந்து வெளியேறிய இளையர்களுக்கு உதவும் ‘ஸ்டார்ஃபிஷ்’ சமூகத்திற்கு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்