பல் போனால் சொல் போச்சு

கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 3.5 பில்லியன் பேருக்குப் பற்கள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறியுள்ளது.

இரண்டு பில்லியன் பேர் தங்களின் நிரந்தரப் பற்களின் சிதைவாலும் 514 மில்லியன் குழந்தைகள் முதன்மை பற்களின் சிதைவாலும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது அந்த அறிக்கை.

உடல் நலத்துடன் நேரடித் தொடர்புடைய பற்கள்

தினமும் இருவேளை பல் துலக்குதல், ஒவ்வொரு முறை உணவுக்குப் பின்பு வாய்க் கொப்பளித்தல், அடிக்கடி உப்பு சேர்த்த வெந்நீரில் வாய்க் கொப்பளித்தல் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

பல் துலக்குதல்

பல் துலக்குவதை அலட்சியமாகக் கையாளாமல் உரிய பற்பசை, பல் துலக்கி ஆகியவற்றை முறையாகத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.

குறிப்பாக ‘ஃபுளோரைடு’ எனும் அமிலம் பற்களுக்கும் எலும்புகளுக்கும் நலத்தைத் தரும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி 1,000 முதல் 1,500 பிபிஎம் அளவு ‘ஃபுளோரைடு’ கொண்ட பற்பசையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல, பல் துலக்கி முழுவதும் பற்பசை இட்டுப் பயன்படுத்தக் கூடாது. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் ‘அரிசி’ அளவிலும், அதற்கு மேற்பட்ட வயதுள்ளோர் அனைவரும் ‘பட்டாணி’ அளவிலும் பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக பல் துலக்கிய பின், பற்பசை போகும் அளவுக்கு நன்கு கொப்பளித்து வாயைச் சுத்தம் செய்ய வேண்டும்.

பல் துலக்கி கடினமான, மிதமான, மென்மையான நார்கள் என மூன்று வகைகளில் வருகின்றன. பொதுவாக மென்மையான பல் துலக்கியைப் பயன்படுத்துவதே சிறந்தது.

சற்றே கடினமான கறைகளை நீக்க வேண்டும் என்றால் மிதமான நார்கள் கொண்ட பல் துலக்கியைப் பயன்படுத்தலாம்.

கடினமான நார்களைக் கொண்ட பல் துலக்கியைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் பற்கள் சேதமடையலாம்.

மிகப் பலவீனமான பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கூச்சம் கொண்டவர்கள் ‘அல்ட்ரா சாஃப்ட்’ எனப்படும் மிக மென்மையான நார்களைக் கொண்ட பல் துலக்கியை உபயோகிப்பதே சிறந்தது.

இது தவிர, நேரான நார்கள் கொண்ட பல் துலக்கிகளும் ‘கிறிஸ் கிராஸ்’ வடிவிலான நார்கள் கொண்ட பல் துலக்கிகளும் கிடைக்கின்றன.

சீரான பல்வரிசை கொண்டவர்கள் நேரான நார்கள் கொண்ட துலக்கிகளை உபயோகித்தல் போதுமானது. பற்கள் சீராக இல்லாமல், முன்னும் பின்னுமாக இருந்தால் குறுக்கு நார்கள் கொண்ட துலக்கிகளை உபயோகித்தால் அனைத்துப் பகுதிகளையும் எட்ட உதவும்.

தற்போது இளையர்களிடையே மின் பல் துலக்கிகள் பிரபலமடைந்துள்ளன. இவற்றுக்கும் சாதாரண பல் துலக்கிகளுக்கும் பெருமளவில் வேறுபாடு இல்லை என்றாலும் சீரான அழுத்தத்தில் பல் துலக்க உதவும் மின் பல் துலக்கிகளையும் பயன்படுத்தலாம்.

பல் துலக்கிகளைச் சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த வெந்நீரில் பல் துலக்கியை‌ச் சுத்தம் செய்து உபயோகிக்கலாம்.

மேலும், பல் துலக்கியின் பின்புறமுள்ள சொரசொரப்பான அமைப்பைக் கொண்டோ பிரத்யேக பொருள்களைக் கொண்டோ நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம்.

முறையாக பல் துலக்குபவர்கள்கூட செய்யாமல் இருப்பது ‘ஃபிளோசிங்’ எனும் பல் தழுவுதல். நன்கு பல்துலக்கினாலும் பற்களின் 60 விழுக்காட்டுப் பகுதிகள் மட்டுமே தூய்மையடைகின்றன.

மீதமுள்ள 40 விழுக்காட்டை தூய்மைப்படுத்தும் முறைதான் மெல்லிய நைலான் நூல் கொண்டு, பல் இடுக்குகளில் சிக்கியுள்ள அழுக்கை நீக்கும் தழுவுதல் முறை. இதைத் தவறாமல் செய்தால் பல் சொத்தை அடைவதற்கான வாய்ப்பு குறைகிறது.

பிற அடிப்படைப் பராமரிப்புகள்

ஒவ்வொரு முறையும் உணவருந்திய பிறகு வாய்க் கொப்பளிப்பது, பற்கள் இடுக்கில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை உடனடியாக நீக்கிப் பற்சிதைவைத் தடுக்கிறது.

பற்களுக்கு அடிப்படைத் தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பால் பொருள்கள், பாதாம் உள்ளிட்ட உலர் விதைகள், கீவி உள்ளிட்ட பழங்களையும் உட்கொள்ளலாம்.

அதீத சர்க்கரை கொண்ட உணவு வகைகள், கலனில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், காப்பி ஆகியவற்றை குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது.

காலையில் பல் துலக்கியதும் சிறிதளவு நல்லெண்ணெய்யை வாயில் சில நிமிடம் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் ஈறுகளும் பற்களும் உறுதியடைகின்றன.

‘ஒமேகா 3’ அடங்கிய உணவு வகைகளை உட்கொள்வது பற்களுக்கு வலிமை தரும்.

பல் வலி, ஈறு வீக்கம், கூச்சம், ரத்தக் கசிவு என எந்தவிதப் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகித் தொடக்கத்திலேயே சரிசெய்வது சிறந்தது.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பற்களைப் பரிசோதித்துக்கொள்வதும் பிற்கால பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!