ஆண்களுக்கான சருமப் பராமரிப்பு

பெண்களை போலவே ஆண்களும் தற்போது தங்கள் சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளவும், தோற்றத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர்.

பெண்களைவிட ஆண்களின் சருமம் சற்றே கடினமானது. ஆண்களின் சருமத்தில் கொலாஜன், எலாஸ்டின் ஆகிய சுரப்பிகள் அதிகமாக இருப்பதால் அவர்களின் சருமம் பெண்களைவிட அதிக தடிமனாக இருக்கும்.

அத்துடன் ஒளி, அழுக்கு, தூசு, மாசு ஆகியவை தொடர்ந்து சருமத்தைப் பாதிக்கிறது. இவற்றிலிருந்து சருமத்தைக் காத்து, பொலிவிழக்காமல் இருக்கச் செய்ய சில அடிப்படைப் பராமரிப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்த ‘கிளென்சிங்’

சருமத்தின் சமநிலையையும் பொலிவையும் பராமரிக்க முதலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தி சீராக்க வேண்டும். மிகை எண்ணெய்ச் சுரப்பு பருக்கள் தோன்ற வழி வகுக்கலாம்.

இதனைத் தடுக்க, அடிக்கடி முகத்தைக் கழுவி சுத்தம் செய்வது அவசியம். குறிப்பாக இதற்கென தயாரிக்கப்பட்ட ‘ஃபேஸ் வாஷ்’களைப் பயன்படுத்துவது முக்கியம்.

அதுமட்டுமின்றி, சருமத்தின் துளைகளில் புகுந்துகொள்ளும் மாசுக்களை சுத்தம் செய்ய நாளும் இரண்டு முதல் மூன்று முறை முகத்தை உரிய ‘ஃபேஸ் வாஷ்’ கொண்டு, குளிர்ந்த நீரில் கழுவி மென்மையான பருத்தித் துணியால் ஒற்றி எடுக்க வேண்டும்.

எண்ணெய் சுரப்பு அதிகமில்லாத சருமம் கொண்டவர்கள் ‘கிளென்சர்’களைப் பயன்படுத்தி முகத்தைச் சுத்தம் செய்யலாம். அது முகத்திலுள்ள நுண்ணுயிரிகளை அழிப்பதோடு, சருமத்தின் ‘பிஎச்’ அளவைக் குறைத்து, நல்ல எண்ணெய்களை அழிக்காமல், முகத்தை ஈரப்பதத்தோடும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது.

இறந்த அணுக்களை அகற்ற ‘ஸ்கிரப்பிங்’

ஆண்களின் கடினமான சருமத்தைச் சற்று மென்மையாக்க ‘ஸ்க்ரப்பிங்’ எனும் சுத்தம் செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

‘ஸ்க்ரப்பிங்’ என்பது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் வழிமுறை. இது,‘எக்ஸ்ஃபொலியேஷன்’ எனும் சருமத்தின் முதல் அடுக்கிலுள்ள இறந்த செல்களை உதிரச் செய்து, முகப்பரு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கிறது.

சருமத்தில் செதில்கள் தோன்றாமல், சவரம் செய்வதால் வரும் பாதிப்புகளைக் குறைத்து, சரும நிறத்தையும் சீராக பாதுகாக்க இம்முறை உதவுகிறது. ‘சார்க்கோல்’ எனும் கரி, களிமண், கற்றாழை எனப் பல வகைகளில் வரும் ‘ஸ்க்ரப்’களில் ஒருவர் தமது சருமத்திற்கு உகந்ததைத் தெரிவுசெய்து பயன்படுத்தலாம்.

ஈரப்பதம் காக்கும் ‘டோனர்’

முகத்தில் புள்ளிகள், பொரிபொரியாக இருப்பதாக வருந்தும் ஆண்கள், காலையிலும், இரவு தூங்கும் முன்பும் ‘டோனர்’ பயன்படுத்தலாம்.

முகத் துவாரங்களில் நீர்ச்சத்தை வழங்கி, சருமத்திற்கு மென்மை அளிக்கும் டோனர்கள் நல்ல மாற்றத்தைத் தரும்.

சருமப் பொலிவிற்கு ‘மாய்ஸரைசர்’

அன்றாடம் குளித்த பிறகு, வெளியில் செல்லுமுன் ‘மாய்ஸரைசர்’ பயன்படுத்துவது சிறந்த சரும பராமரிப்பு முறை. சரும தன்மைக்கேற்ப உரிய ‘மாய்ஸரைசர்’ பயன்படுத்துவது ஊட்டச்சத்தை தோலுக்கு அளிக்கிறது. இது, சருமம் வயதான தோற்றமளிப்பதைத் தடுத்து பொலிவடையச் செய்கிறது.

சுருக்கம் வராமல் காக்க ‘சன்ஸ்க்ரீன்’

ஆண்களின் சருமத்தில் சுருக்கம், ‘ஏஜ் ஸ்பாட்ஸ்’ எனும் திட்டுகள் ஏற்பட முக்கியக் காரணம் சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள். வெயிலில் அதிகம் பயணம் செய்ய வேண்டியுள்ளவர்கள், சருமப் புற்றுநோய் தாக்காமல் காத்துக்கொள்ள உரிய ‘சன்ஸ்க்ரீன்’ பயன்படுத்த வேண்டும்.

வெளியில் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு குறைந்தது ‘எஸ்ஃபிஎஃப்’ 50 புள்ளிகள் கொண்ட சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். நாள் முழுவதும் வெயிலில் இருக்க நேரிட்டால் உரிய இடைவெளியில் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.

பிற பாதுகாப்பு நடவடிக்கைகள்

சருமப் பொலிவிற்கு வைட்டமின் சி உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள், உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நீர் அருந்துவது, சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதவும். நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். பழச்சாறு, இளநீர் ஆகியவற்றையும் அருந்தலாம்.

முகச்சவரம் செய்யும் கத்தியால் சருமத்தில் எரிச்சல், வீக்கம், சிவந்த தோல், வறட்சி, ‘ரேஸர் பம்ப்ஸ்’ எனப்படும் தடிப்புகளும் ஏற்படலாம். இதற்கு முகச்சவரம் செய்த பிறகு ‘ஆஃப்டர் ஷேவ்’ பயன்படுத்துவதும் முக்கியம்.

முகத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போட,வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை கொண்ட ‘ஆன்டி ஏஜிங் கிரீம்’களைப் பயன்படுத்தலாம்.

முகத்திற்கும் உடலுக்கும் ஒரே சோப்பைப் பயன்படுத்தாமல் இருப்பது அவசியம்.

இயற்கையாக சருமப் பொலிவைக் கூட்ட, பாதாம் எண்ணெய், சந்தனப் பொடி, ஆலிவ் எண்ணெய், கடலை மாவு சேர்த்து ‘ஃபேஸ்பேக்’ போடலாம்.

பப்பாளி போன்ற பழங்களைக் கொண்டு வீட்டிலேயே ‘ஃபேசியல்’ செய்யலாம்.

‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ சத்து நிறைந்த உணவு, பழங்கள், காய்கறிகள் உட்கொள்வதும் சருமப் பராமரிப்பிற்கு முக்கியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!