மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் பிப்ரவரி 3ல் அறிமுகம்

மா. அன்பழகனின் ‘செம்பியன் திருமேனி’ நூல் பிப்ரவரி 3ல் அறிமுகம்

தமிழ்முரசு

01 Feb 2024 - 4:39 pm

1 mins read

10ஆம் நூற்றாண்டில் நடந்ததாக எழுத்தாளர் மா. அன்பழகனால் புனையப்பட்ட நாவல் “செம்பியன் திருமேனி”. தமிழகத்தின் மதுரை, திருவாரூர், நெய்வேலி, சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுப் பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூல் இப்போது சிங்கப்பூரில் அறிமுகம் காணவிருக்கிறது.

சனிக்கிழமை (பிப்ரவரி 3) மாலை 6.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கும். முன்னதாக, மாலை 5.30 மணியிலிருந்து 6.25 வரை இரவு உணவு வழங்கப்படும்.

நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், இலங்கையின் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை-இந்திய அனைத்துலக தொழில் வர்த்தக சபையின் தலைவரும், சொற்பொழிவாளரும், படைப்பாளருமான முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

மலேசியத் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

விழா தொடக்கத்தில் 90 வயதான தமிழறிஞர் சுப. திண்ணப்பனார் தம்பதிக்கும், புராப்நெக்ஸ் சொத்து முகவர் நிறுவன உரிமையாளர் இஸ்மாயில் கபூரின் தந்தையான 100 வயது அப்துல் கபூர் தம்பதிக்கும் சிறப்பு செய்யப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு 90053043 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்