கண்கவர் கடல்நாகக் கைக்கடிகாரம்

ஒவ்வொரு சீனப் புத்தாண்டிற்கும் சீனப் பஞ்சாங்கத்திலுள்ள 12 விலங்குகளை ஒட்டிய கடிகாரங்கள் சுவிட்சர்லாந்தில் வெளியாவது வாடிக்கை.

சீனப் பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு கடல்நாக ஆண்டாக உள்ளது. சீனக் கலாசாரத்தில் அதிகாரம், நற்பேறு, வெற்றி ஆகியவற்றைக் கடல்நாகங்கள் குறிக்கும்.

இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் மின்னும் ‘ஹப்லாட் ஸ்பிரிட் ஆஃப் தி பிக் பேங் டைட்டானியம் டிராகன்’ என்ற கைக்கடிகாரம், நுணுக்கமான ஓவிய வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

காகிதக் கலைவினைப் பொருள்களை உருவாக்கும் பிரபல சீன ஓவியர் சென் ஃபென்வன், கைக்கடிகார முகப்பில் கம்பீரமான கடல்நாக முகத்தை வரைந்திருக்கிறார். ‘டைட்டானியம்’ உலோகத்தால் ஆன இந்தக் கடிகாரம், நன்கு பட்டை தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.

‘எச்’ (H) வடிவிலான கடிகார முள்களும், சக்கரங்களுடன், அதன் திருகாணிகளும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளன. அத்துடன், கடிகாரப் பட்டையானது கடல்நாகத்திற்கு உரியதாகக் கருதப்படும் செதில்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வண்ணங்களிலுள்ள செதில்கள் ரப்பரால் ‘மார்க்கெட்ரி’ எனும் அணிநய வேலைப்பாட்டினால் செய்யப்பட்டவை. ரப்பர் செதில் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிறமேற்றப்பட்டு, கடும் வெப்பத்தில் கெட்டிப்படுத்தப்படுவதால் இவ்வகை கைக்கடிகாரங்களைச் செய்வதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது.

ஒரு கைக்கடிகாரத்தின் விலை 41,800 வெள்ளி. இவ்வகைக் கைக்கடிகாரங்கள் மொத்தமே 88தான் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!