கல்லீரல் பலம் பெற இஞ்சி, பூண்டு, ஆலிவ்

ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருள்களை வடிகட்டுதல், நச்சுகளை உடைத்தல், வளர்சிதை மாற்றத்திற்குக் கைகொடுத்தல், நோயெதிர்ப்புச் செயல்பாடு, செரிமானம் உள்ளிட்ட உடல் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பெரிய உடலுறுப்பு கல்லீரல்.

சராசரி மனித உடல் எடையில் 2 விழுக்காடு கொண்ட கல்லீரல் பெரிதும் கவனிக்கப்படாத உறுப்பாக இருக்கிறது.

கல்லீரலைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உண்பதும் மது அருந்துவதைத் தவிர்ப்பதும் அவசியம்.

சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட ஆய்வில், நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் (வைட்டமின்), தாதுக்கள் போன்ற கல்லீரலைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை 39 விழுக்காடு குறைப்பதாகத் தெரியவந்தது.

இஞ்சியும் பூண்டும்

அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற வேதிப்பொருள்கள் அடங்கிய இஞ்சியை உட்கொள்வது கல்லீரலுக்கு நன்மை செய்கிறது.

இனிப்பு, காரம் என பல சுவைகளுடன் பொருந்திப் போகும் இஞ்சியை தேநீர் உள்ளிட்ட பிற உணவுகளில் சேர்ப்பது நன்மை அளிக்கலாம்.

இஞ்சியைப் போலவே, பூண்டிலும் கல்லீரலுக்கு நன்மைதரும் அலிசின், அல்லினின், அஜோயின் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

பூண்டு உட்கொள்வது குறிப்பிடத்தக்க அளவில் கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாரத்திற்கு குறைந்தது இருமுறை பூண்டைப் பச்சையாகச் சாப்பிடுவது கல்லீரலை நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

சியா, ஆளி விதைகள்

சியா விதைகள், ஆளிவிதைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை என்பதால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதன்மூலம் கல்லீரல் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது.

குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டி, உடலின் பல பகுதிகளில் ஏற்படும் வீக்க பாதிப்புகளைத் தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யிலுள்ள ‘மோனோசாச்சுரேட்டட்’ கொழுப்புகள் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவுகின்றன.

ஆலிவ் எண்ணெய்யில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றச் சேர்மங்கள், கல்லீரல் உயிரணுக்களைப் பாதுகாப்பதன் மூலமும் வீக்கத்தைத் தடுப்பதன் மூலமும் பொதுவான கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கடல்சார் உணவுகளில் காணப்படும் செலினியம், வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை கல்லீரல் கொழுப்பைக் குறைக்கவும் கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பருப்புகள், உலர் விதைகள்

பட்டாணி போன்ற பருப்பு வகைகள், உலர்விதைகளில் உள்ள புரதம், நார்ச்சத்து ஆகியவை கல்லீரல் நொதிகளைக் குறைத்தல், ரத்த அழுத்த அளவைக் குறைத்தல் மூலம் கல்லீரலைப் பேண உதவுகிறது.

கொழுப்பு, சர்க்கரை மிகுதியாக உள்ள உணவு வகைகளைக் குறைத்தல், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவு, இறைச்சி உட்கொள்வதைக் கட்டுப்படுத்துதல், மது, புகைப் பழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!