எலும்பு மண்டலப் பிரச்சினைகள் வருமுன் காப்போம்

பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் நீண்டநேரம் அமர்ந்தவாறே பணியாற்றும் சூழல் உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து செய்வது பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்த தசை நார்கள், சதை, இணைப்புத் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்தி, கை, கழுத்து, தோள்பட்டை, முதுகு தொடங்கி கால் வரை வலியை உண்டாக்கும்.

சிலருக்கு முதுகு கூன் போடுவது தொடங்கி, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட நீண்ட நாள் பிரச்சினைகளும் ஏற்படலாம். இவை தவிர, கண்களும் பாதிப்படையலாம்.

இவற்றைத் தடுக்க, உட்காரும் முறையையும் நிற்கும் முறையையும் சரி செய்வது அவசியம் என்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான இணைப் பேராசிரியர் ஹமீத் ரசாக்.

தசை அழுத்தம் ஏற்படுத்தும் தவறான பழக்கங்கள்

முதலாவதாக, எப்போதும் சற்றே குனிந்த நிலையில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகத் தோள்பட்டையை முன்னோக்கி, அல்லது பக்கவாட்டில் சாய்த்தபடி அமரக்கூடாது என்கிறார் இவர். இது தசை இறுக்கத்தை ஏற்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தையும் குறைக்கும்.

அடுத்ததாக, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதையும், கால்களைக் குறுக்காகக் கட்டியபடி உட்காருவதையும் தவிர்க்க வலியுறுத்துகிறார் மருத்துவர் ஹமீத் ரசாக். இது கால் மரத்துப்போதல், வலி உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதுடன் முதுகெலும்பின் சீர்கேட்டுக்கும் வழிவகுக்கலாம்.

முக்கியமாக, பணியாற்றுகையில் கைப்பேசியில் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால், தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் வைத்துக்கொண்டு பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும் என்கிறார் ஹமீத் ரசாக்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

தொடர்ந்து உட்காருவதால் ஏற்படும் வலியையும் அதனைத் தடுக்க உதவும் சில குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் ஹமீத் ரசாக்.

உட்கார்ந்தபடியே நாள்முழுதும் பணியாற்றுபவர்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கால்களை ஊன்றியபடி தரையில் உட்காருவது நல்லது.

எப்போதும் முதுகை நேராகவும் தோள்களை தளர்வாகவும் வைத்து அமரப் பழகவேண்டும்.

பணியிடத்தில், கணினித் திரை சரியாக கண் மட்டத்தில் அல்லது சற்றே கீழ் மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கைகள் பாதிவரை இல்லாமல், முழங்கை வரை முழுதாக மேசையில் வைத்தபடி அமர வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடப்பது, கைகளை நீட்டுவது, உடலைச் சற்று அசைப்பது உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தசைகளுக்கு ஓய்வளித்து, முதுகெலும்பு, கழுத்து என எலும்புகளில் வரும் பல பிரச்சினைகளை முன்கூட்டியே தவிர்க்கலாம் என்கிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!