கவிஞர் அன்புவடிவின் கவிதை நூல்கள் வெளியீடு

1 mins read
8cfc4c5f-de14-4291-bef7-9e4ded7c6971
கவிஞர் அன்புவடிவின் கவிதை நூல்கள் வெளியீடு.  - படம்: தாரகை இலக்கிய வட்டம்
multi-img1 of 3

உலக மகளிர் தினத்தையொட்டி கவிஞர் அன்புவடிவின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு காணவுள்ளன. 

தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் இம்மாதம் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ‘தி பனானா லீஃப் அப்போலோ’ உணவகத்தின் இரண்டாம் தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது (முகவரி: 54, ரேஸ் கோர்ஸ் சாலை, சிங்கப்பூர் 218564). 

இந்நிகழ்ச்சியில் கவிஞர் ச. அன்புவடிவின் ‘அன்பின் நடையில் அடையாளம்’ (புதுக்கவிதைகள்), ‘அகத்தில் எழுந்த அலை’ (மரபுக் கவிதைகள்) எனும் இரண்டு நூல்கள் வெளியிடப்படும். 

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கவிமாலையின் காப்பாளர் மா. அன்பழகன் கலந்துகொள்ள இருக்கிறார். 

மஹ்ஜபீன், பிச்சினிக்காடு இளங்கோ, முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு உரைகளும் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்கள். இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாக இசக்கி செல்வியின் நூலாய்வு அங்கமும் இடம்பெறுகிறது. நிகழ்வினை எழிலி கருணாகரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

குறிப்புச் சொற்கள்