தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாசகர் வட்ட ஆண்டு விழாவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

1 mins read
c3976982-e980-4019-ad87-5aa77d8808e9
எழுத்தாளர் நாஞ்சில் நாடன். - படம்: ஊடகம்

வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மார்ச் 16, 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

சனிக்கிழமை 16ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் இடம்பெறும் நிகழ்ச்சியில் நூலறிமுகம், ஆடல், பாடல், சிறப்பு விருந்தினரும் முன்னணி எழுத்தாளருமான நாஞ்சில் நாடனின் சிறப்புரை, நூலறிமுக உரைகள் ஆகியவை இடம்பெறும். தேநீர், சிற்றுண்டி, இரவு விருந்து வழங்கப்படும். நோன்பு துறக்கும் அன்பர்களுக்கு நோன்பு துறப்பு உணவுவகைகளும் உண்டு.

நிகழ்ச்சி விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் இடம்பெறும்.

மறுநாள் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வாசகர்களைச் சந்தித்து, கலந்துரையாட இருக்கிறார். ‘செவ்விலக்கியம் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தவும் உள்ளார்.

இந்நிகழ்ச்சி தேசிய நூலகத்தின் முதல் தளத்திலுள்ள ‘விசிட்டர்ஸ் பிரீஃபிங்’ அறையில் இடம்பெறும். தொடர்புக்கு: சித்ரா ரமேஷ் - 97733186

குறிப்புச் சொற்கள்