தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுவர் பாடல்கள் உயிரோவிய வடிவில் வெளியீடு

1 mins read
5fe9761f-59f3-4ad7-a4c4-26255c0ff887
எழுத்தாளருடன் (பின்வரிசையில் இடது), சிறுவர் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துரையாடிய பேச்சாளர்களும் பாடல்களைப் படைத்த சிறுவர்களும். - படம்: சேதுராமன் சீனிவாசன்

எழுத்தாளர் அழகுநிலா எழுதிய பத்துச் சிறுவர் பாடல்கள், இரு மொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் மார்ச் 24ஆம் தேதி, உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் வெளியீடு கண்டன.

கிட்டத்தட்ட நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நீ ஆன் வளாகம் - பாலர்பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்விக் கழக முதன்மை விரிவுரையாளர் முனைவர் கிருஷ்ணசாமி லலிதா சிறப்புரை ஆற்றினார்.

பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளித் தமிழ் ஆசிரியை லூயிஸ் ஜெய ரூபி கரோலின், மென்பொருள் ஆய்வாளர் வெண்ணிலா அசோகன், கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ் நிறுவனர் ஜெகன்னாத் ராமானுஜம் மூவரும் கலந்துரையாடலில் பங்கேற்று, பாடல்கள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பத்துச் சிறுவர்கள் மேடையேறி, பாடல்களைப் படைத்தனர்.

திருமதி அழகுநிலாவின் பத்துப் பாடல்களையும் ‘சிங்கை சிட்டுகள்’ @singaichittukkal என்ற யூடியூப் ஒளிவழியில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்