இளையர்களுக்கான திரைக்கதைப் பயிலரங்கு

இளையர்களுக்கான திரைக்கதைப் பயிலரங்கு

2 mins read
36969478-44a1-4245-93ef-eabdd222d546
சிங்கப்பூர் இந்திய நாடக, குறும்பட ஆர்வலர்கள் நிறுவனம் நடத்தும் திரைக்கதை எழுதும் பயிலரங்கு. - படம்: சிங்கப்பூர் இந்திய நாடக, குறும்பட ஆர்வலர்கள் நிறுவனம்

இளையர்களிடையே திரைக்கதை எழுதும் ஆர்வத்தை உண்டாக்‌கும் வகையில் பயிற்சிப் பயிலரங்கு ஒன்றுக்கு சிங்கப்பூர் இந்திய நாடக, குறும்பட ஆர்வலர்கள் நிறுவனம் (சிட்ஃபி) ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் இப்பயிலரங்கு தேசிய நூலகத்தின் கற்பனை அறையில் (National Library’s Imagination Room) வரும் சனிக்கிழமை (ஜூலை 27) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும்.

தேசிய வாசிப்பு இயக்­கத்­தின் ஓர் அங்­க­மான ‘புத்­த­கங்­க­ளுக்­காக வாசி­யுங்­கள்’ (Read for Books) என்ற புத்­தக நன்­கொடை இயக்­கத்துடன் இணைந்து நடைபெறவுள்ள இப்பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் படித்து, அவர்களுக்‌கு பிடித்த காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திரைக்கதைகளாக மாற்றி எழுதக் கற்றுகொள்வார்கள்.

மேலும், ஒரு திரைப்படத்தை உருவாக்க தேவைப்படும் திரைக்கதையின் அடிப்படைக் கட்டமைப்பு குறித்து இந்த அறிமுகப் பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் தெரிந்துகொள்வார்கள்.

“உள்ளூர் இலக்கியங்களிலிருந்தும் ஊக்கம் பெற முடியும் என்பதை நாங்கள் திரைத்துறையில் ஆர்வமுள்ள இளையர்களுக்குக் காட்ட விரும்புகிறோம்,” என்று கூறினார் இயக்‌குநரும் நிகழ்ச்சியின் வழிநடத்துநருமான சலீம் ஹாடி, 42.

13 வயது நிரம்பிய இளையர்களுக்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிட்ஃபியின் ‘திரைக்குப் பின்னால்’ என்ற தலைப்பிலான இருமொழித் (தமிழ், ஆங்கிலம்) தொடரின் இரண்டாம் பாகமாக இப்பயிலரங்கு நடைபெறும். உள்ளூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகளையும் அவற்றின் தழுவல்களையும் கொண்டாடும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த 4-பாகத் தொடர், 2024 தமிழ் மொழி மாதத்தில் தனது முதல் பாகத்தை நடத்தியது.

இப்பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் https://tinyurl.com/tpevent2sitfe என்ற இணையப்பக்கம் மூலம் பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்