தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் இரவுத் திருவிழா - இந்திய கலாசார நிகழ்வுகள்

2 mins read
1f6f635d-adee-417a-8327-178d3db8fc9b
சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2023 காட்சி - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கலை, கலாசாரத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர் இரவுத் திருவிழா வரும் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 7 வரையிலான வார இறுதிகளில் கொண்டாடப்பட உள்ளது.

கலை நிகழ்ச்சிகள், நிறுவல்கள் என பல்வேறு பாரம்பரியங்களின் செழுமையைக் கொண்டாடும் விதமாக பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை இத்திருவிழா உள்ளடக்கும்.

‘கதக்’ நடனப் பயிலரங்கு

இசை, நடன வடிவங்கள் மூலம் கதைகளுக்கு உயிரூட்டும் வகையில் வடிவமைக்கப்படும் இந்திய பாரம்பரிய நடனமான ‘கதக்’ கற்பிக்கும் பயிலரங்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றான ‘கதக்’ நடனங்களின் அடிப்படைகளைக் கற்றுத்தரும் இப்பயிலரங்கை நடனக் கலைஞர் பல்லவி வழிநடத்துவார்.

பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் இப்பயிலரங்கு ஐந்து வயதுக்கு மேற்பட்ட யாவரும் கலந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாள்: 31 ஆகஸ்ட் 2024 இடம்: ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டர் கட்டணம்: $5

இந்திய நடனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்

இந்திய நடனத்தின் முக பாவனைகள், கை அசைவுகள் என அனைத்தும் ஒருவித உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே அமைகின்றன.

அவை குறித்த புரிதலை ஏற்படுத்தி, அதன் மூலம் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள பயிலரங்கு வரும் செப்டம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

சாந்தா ரதி இனிஷியேட்டிவ்ஸ் நடத்தும் இப்பயிலரங்கில் இந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நாள்: 6, 7 செப்டம்பர் 2024 (இரவு 8 - 8.30 மணி, 9 - 9.30 மணி) இடம்: ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டர் கட்டணம்: $5

‘கதகளி’

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாரம்பரியமான ‘கதகளி’ நடனத்திற்கு, அதற்கே உரிய வித்தியாசமான பாணியில் ஆடை ஆபரண வடிவமைப்புகளும் ஒப்பனைகளும் அமையும்.

அந்த வடிவமைப்புகள், தயாரிப்புகளைக் கண்டு ரசிக்கும் விதமாக பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நாள்: 07 செப்டம்பர் 2024 இடம்: ஸ்டாம்ஃபோர்ட் ஆர்ட்ஸ் சென்டர் கட்டணம்: இலவசம்

குறிப்புச் சொற்கள்