ஃபிரண்ட்டியர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் 24ஆம் ஆண்டு ‘பைனியர் தீப ஒளி 2024’ விழா நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஃபிரண்ட்டியர் சமூக மன்றக் கட்டடத்தின் 4வது தளத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஃபிரண்ட்டியர் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பேட்ரிக் தே தெக் குவான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
விழாவின் சிறப்பு அம்சமாக வானொலி படைப்பாளர் விமலா, வசந்தம் ஒளிவழிக் கலைஞர்கள் மற்றும் உள்ளூர் நடனமணிகள் பங்கேற்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சி, அதிர்ஷ்டக் குலுக்குகள் போன்றவை நடைபெற உள்ளன.
சைவ, அசைவ உணவு, அன்பளிப்புப் பை மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கில் கலந்துகொள்வதற்கான கட்டணம் $10 மட்டுமே.
மேல் விவரங்களுக்கு 6795 8229 என்ற எண்ணில் ஃப்இரண்ட்டியர் சமூக மன்றத்தை அழைக்கவும்.

