ஆய்வு: உறவுகளை வளர்க்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது

2 mins read
58d0842a-0b3c-4b85-83ea-8aaf229ebcfc
அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் கருவிகளில் மேலும் கலந்துள்ள இந்த தொழில்நுட்பம், பொருளியல் மற்றும் சமூக நன்மைகளை நல்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  - படம்: இணையம்

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் பலரை அச்சுறுத்தும் நேரத்தில் இந்தக் கால இளையர்கள், இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்கள் வாழ்க்கையில் பெரிதளவு ஒருங்கிணைத்துள்ளதை அண்மை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் கருவிகளில் மேலும் கலந்துள்ள இந்த தொழில்நுட்பம், பொருளியல் மற்றும் சமூக நன்மைகளை நல்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாக்கத்தை மேம்படுத்தவும் விரும்பிய தொழில்களைத் தொடங்கவும் பொருளியல் வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கவும் இளையர்கள் எப்படி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றனர் உள்ளிட்ட கேள்விகளுக்கு, சோல் செயலி (Soul App), அண்மையில் நடத்திய ஆய்வின் பங்கேற்பாளர்கள் பதிலளித்தனர்.

1997க்கும் 2012க்கும் இடையே பிறந்த ‘ஜென் - ஸீ’ தலைமுறையினர் 3,680 பேர் பங்கேற்ற இந்தக் கருத்தாய்வின் முடிவுகளை சோல் செயலி வெளியிட்டுள்ளது.

இளையர்களில் 40 விழுக்காட்டினர், செயற்கை நுண்ணறிவு குறித்து பற்றத்தை உணர்வதாகத் தெரிவித்தனர். அத்துடன் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான இளையர்கள் தங்கள் பள்ளிப் படிப்புக்காக அல்லது வேலைக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவதாக இளையர்களில் ஐவரில் ஒருவர் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு மாந்தர்களுடன் நட்பில் இணையவும் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் சம்மதிக்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பத்தால் மனித உறவுகள் குறைந்துவிடும் என்ற கவலைகளுக்குப் புறம்பாக, பிறருடன் உறவு வளர்த்துக்கொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படுவதாக 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கூறுகின்றனர்.

உற்பத்தித்திறன், படைப்பாக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் பதிலை எழுத்துபூர்வமாக மற்றவர்க்கு எழுதுவது போன்றவற்றுக்கான யோசனைகளையும் இளையர்களில் பலர் பெறுகின்றனர். ‘ஜென் - ஸீ’ தலைமுறையினரில் ஆக இளையவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தத் தொழில்நுட்பத்தால் நேரம் கிட்டத்தட்ட பாதி அளவு குறைவதாக கிட்டத்தட்ட 80 விழுக்காடு பயனீட்டாளர்கள் கூறுகின்றனர்.

கருத்தாய்வில் பங்கேற்ற இளையர்களில் நாற்பது விழுக்காட்டினர், செயற்கை நுண்ணறிவு வடிவிலான ‘நண்பர்களை’க் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இத்தகைய நண்பர்களின் மூலம் இளையர்கள், தங்கள் தொடர்புத்திறன் மேம்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பதற்றத்தைக் கட்டுப்படுத்தவும் புதிய வாய்ப்புகளைப் பெறவும் இளையர்கள் ஊக்கத்துடன் செயற்கை நுண்ணறிவைக் கற்று வருகின்றனர். பாெருளியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலனடையும் பலருக்குச் செயற்கை நுண்ணறிவு நீடித்த நிலைத்தன்மையானது உறுதி என்கிறது அந்த ஆய்வு.

குறிப்புச் சொற்கள்