சுப. அருணாசலம் நினைவு பாடல் போட்டி

சுப. அருணாசலம் நினைவு பாடல் போட்டி

1 mins read
df3a18b5-d6da-4f71-aaf5-26944e53e03f
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் சுப. அருணாசலம். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா, இவ்வாண்டு நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதனையொட்டி, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முன்னாள் தலைவர் சுப. அருணாசலம் நினைவாக, அவருடைய குடும்பத்தினரின் நிதியாதரவுடன் ‘சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி’க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள்:

பாடல் எழுதுவதற்கான சூழல் - சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. சிங்கப்பூரில் பல கண்கவர் இடங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுப் பாடல் வரிகளை எழுத வேண்டும்.

பாடல் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்க வேண்டும். ஒரு பல்லவியும் மூன்று சரணங்களும் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் நான்கு வரிகளில், மொத்தம் 16 வரிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் மூன்று பாடல்கள் வரை அனுப்பலாம்.

சிங்கப்பூரகளும் நிரந்தரவாசிகளும் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம்.

எழுத்தாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்கள் தவிர்த்து, மற்ற உறுப்பினர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டி குறித்த நடுவர்களின் முடிவே இறுதியானது.

மேல் விவரங்களுக்கு: நா. ஆண்டியப்பன் - 97849105, சு. முத்துமாணிக்கம் - 96753215, பிரேமா மகாலிங்கம் - 91696996 ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.singaporetamilwriters.com இணையத் தளத்தை நாடலாம்.

நடுவர்களால் தேர்வுசெய்யப்படும் மூன்று பாடல்களுக்கு ரொக்கப் பரிசு உண்டு.

முதல் பரிசு பெறும் பாடல் இசையமைக்கப்பட்டு கண்ணதாசன் விழாவில் ஒலிபரப்பப்படும்.

குறிப்புச் சொற்கள்