தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் நாடகத்துறை முன்னோடியைக் கொண்டாடும் நிகழ்ச்சி

2 mins read
433ded09-7a15-4e00-809c-6f29900b0f5d
மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். - படம்: ஏற்பாட்டுக் குழு

சிங்கப்பூரின் நாடகத்துறையில் தடம் பதித்த மூத்த நாடக ஆசிரியரான 95 வயதாகும் எஸ். எஸ். சர்மாவைச் சிறப்பிக்கும் ஒரு விழா நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், அவாண்ட் நாடகக் குழு இணைந்து தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி, ஜூலை 5ஆம் தேதி விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக ‘தி பாட்’ அரங்கில் நடைபெறவுள்ளது.

“நாடகங்களின் முன்னோடியான திரு சர்மாவைக் கொண்டாட முடிவெடுத்தோம், அதனால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் துணைத் தலைவர் முனைவர் இளவழகன் முருகன்.

“அந்தக் காலத்தில் நடைபெறும் சீர்திருத்த நாடகங்களில் சிங்கப்பூர்ச் சமூகம் குறித்துப் பேசிய முதல் நாடக ஆசிரியர் திரு சர்மா. மொழி, கலாசாரம், கனவுகள் உள்ளிட்டவற்றைப் பிரதிபலிக்கும் காலம் தாண்டிய நாடகங்களை இயற்றியவர். அப்போதெல்லாம் நாடகங்களில் ஆண்கள்தான் பெண் வேடமிடுவார்கள். முதலில் அதிக பெண்களை திரு சர்மா நாடகங்களில் நடிக்க வைத்தார்.

“அவரிடம் பேசும்போது வளமான, அரிய தகவல்களைப் பகிர்வார். அதனை அனைவருக்கும் கொண்டு செல்வதும், அவரைக் கொண்டாடுவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கம்,” என்று கூறினார் திரு இளவழகன்.

சமூகக் கூடங்களில் நடந்து வந்த தமிழ் நாடகங்களை விக்டோரியா தியேட்டர் உள்பட பெரிய அரங்குகளில் நிகழ்த்தியவர் என்றும் கலை விழாக்களில் தொடர்ந்து ஏழாண்டுகள் நடத்திய பெருமையும் இவரையே சாரும். இந்தியன் மூவி நியூஸ் இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் இவர்.

அவர் அமைத்து வைத்த பாதையில் செயல்படும் சமகால நாடகத்துறைப் பிரபலங்கள் க செல்வாநந்தன், ச வடிவழகன், புகழேந்தி, சுப்ரமணியன் கணே‌ஷ், கார்த்திகேயன் சோமசுந்தரம் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று திரு சர்மா குறித்துப் பகிரவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்