நூற்றாண்டு விழாவில் எம். இலியாஸ் எழுதிய இரு நூல்கள் வெளியீடு

3 mins read
22982dbc-856f-4bac-84d8-fd79c77e3ecd
தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணி, சிராஜுல் மில்லத்துக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார். அருகில் காயிதெ மில்லத் அப்துஸ் ஸமது. - கோப்புப் படம்: இலியாஸ்

சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்களிடையே சமயப் பற்றோடு மொழிப்பற்றையும் ஒருசேர வளர்க்க உதவிய இரு பெரும் ஆளுமைகளின் நூற்றாண்டு விழாவையொட்டி நூல்கள் வெளியீடும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.

‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்பதைத் தமிழ் முஸ்லிம்களின் முழக்கமாக மாற்றிய சிராஜுல் மில்லத், அப்துஸ் ஸமது ஆகியோரின் நூற்றாண்டு விழா இம்மாதம் 31ஆம் தேதி, சனிக்கிழமை சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புனித குர்ஆனின் முதல் தமிழ்மொழி பெயர்ப்பு நூலான ‘தர்ஜுமதுல் குர்ஆன்’, மொழிபெயர்ப்புப் பணியில் தனது தந்தையார் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி, அந்தப் பணியை மேற்கொண்டவர்.

அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி, அறிஞர் அண்ணாவே வியந்து பாராட்டிய பேச்சாளர், மணி விளக்கு மாத இதழ் (1954), அறமுரசு நாளிதழ் (1969), மணிச்சுடர் வார (1959), நாளிதழ்களின் (1987) ஆசிரியர்.

மணிச்சுடர் நாளிதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கத்தின் தலைவராகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்தவர் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி.

கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்களின் வழியில் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்த, அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

இசை முரசு நாகூர் இ.எம். ஹனிஃபா

நாகூர் ஹனிஃபா என்றால் அறியாதோர் இருக்க முடியாது. நாகூர் என்றாலே நாகூர் தர்காவும் அங்கு அடக்கமாகியிருக்கும் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் நினைவுக்கு வருவதுடன் நாகூர் ஹனிஃபாவும் நினைவுக்கு வருவார்.

இளம் வயதிலேயே தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதியுடன் மிக அணுக்கமாக அறிமுகமாகி பொதுவாழ்வில் பயணித்தவர்.

திரு. அப்துஸ் ஸமது 1966ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய அரங்கத்தில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாட்டில் காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் தலைமையில் நடைபெற்ற திருக்குர்ஆன் மாநாட்டில் சிறப்புரையாற்றியவர்.

அம்மாநாட்டை தொடங்கி வைத்தவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ. தமிழ் முரசு நாளேட்டின் ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி உள்ளிட்ட பல சமய தலைவர்களும் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பலமுறை சிங்கப்பூருக்கு வருகை தந்த திரு சமது, திரு சாரங்கபாணியுடன் தொடர்பில் இருந்தார்.

மறைந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் மொழி, சமூகத் தொண்டினை நினைவுகூர்ந்து இருவரும் பாராட்டிய அந்த அரிய செய்திக் குறிப்பு ‘நல்லிணக்கக் குரல் - இசைமுரசு நாகூர் ஹனிஃபா’ நூலில் இடம் பெற்றிருப்பதாக நூலாசிரியர் எம். இலியாஸ் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

நாகூர் ஹனிஃபா பாடிய ‘தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு!’ என்ற பாடல் இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு முன்பே இசைமுரசுக்கு இசையமைத்த பாடலாகும்.

‘இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற நாகூர் ஹனிஃபா பாடிய பாடல், மத வேறுபாடின்றி அனைத்து சமயத்தாராலும் விரும்பி பாடப்படும் பாடலாகும்.

குன்றக்குடி அடிகளாரும், மதுரை ஆதீனகர்த்தரும் இவரது பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசியவை மிகப் பிரபலம்.

அவர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ் முஸ்லிம் ஜமா[Ϟ]அத், ராயல் கிங்ஸ் குழுமத்தின் ஆதரவுடன் நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் அந்த இருபெரும் ஆளுமைகள் குறித்து எழுதியுள்ள, ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’, ‘நல்லிணக்கக் குரல் - இசை முரசு நாகூர் ஹனிஃபா’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

நூல் விற்பனைத் தொகை சிராஜுல் மில்லத்/இசைமுரசு நூற்றாண்டு நினைவாக கல்வி உதவி நிதியாக வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்