தொண்டை வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான வழிகள் உள்ளன.
‘ஆப்பிள் சைடர் வினிகர்’
பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பிரதானமாக உள்ளது ‘ஆப்பிள் சைடர் வினிகர்’.
தொண்டை வலியைப் போக்க, ஒரு குவளை அளவு வெதுவெதுப்பான நீரில் ‘ஆப்பிள் சைடர் வினிகர்’ சேர்த்து கொஞ்சம் தேன் கலந்து குடிக்கலாம்.
உப்பு கலந்த தண்ணீர்
உப்பு கலந்த தண்ணீரில் அடிக்கடி வாய் கொப்பளிப்பதால் தொண்டை வலியை போக்கலாம்.
இது தொண்டையில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றும்.
தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாய் கொப்பளிப்பது சிறந்தது.
தேன்
தேனில் அழற்சி எதிர்ப்புத் தன்மை அதிகம் என்பதால் பலர் இதை ஓர் இயற்கை மருந்தாக பயன்படுத்துவதுண்டு.
தேனுடன் வெதுவெதுப்பான நீரில் ‘வினிகர்’ அல்லது மூலிகைகள் கலந்து குடித்தால் தொண்டை வலி போக்கலாம்.
இருப்பினும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தேன் உண்பதை தவிர்ப்பது நன்று.
தண்ணீரில் எலுமிச்சை
எலுமிச்சை நீரில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது. இது தொண்டை வலியை குணப்படுத்த உதவுகிறது.
கூடுதல் பலனுக்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழங்களை சேர்த்து குடிக்கலாம்.
தேநீர்
தொண்டைவலி நிவாரணத்துக்கு குறிப்பாக மூன்று விதமான தேநீரை அருந்தலாம்.
இஞ்சி வேர் தேநீர் - இஞ்சி சாறு சுவாச நோய்களை ஏற்படுத்தும் சில நுண்ணுயிரிகளையும் கிருமிகளையும் கொல்லும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
‘பெப்பர்மிண்ட்’ தேநீர் - கேஃபின் இல்லாத ‘பெப்பர்மிண்ட்’ தேநீர் வீக்கம் மற்றும் தொண்டை வலியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இயற்கையாகவே இனிப்புத் தன்மை இருப்பதால் எளிதில் பருகலாம்.
கெமோமில் தேநீர் - தொண்டை வலியிலிருந்து குணமடைய நல்ல உறக்கம் முக்கியம். நல்ல உறக்கத்தை உண்டாக்க கெமோமில் தேநீர் உதவுகிறது. ‘பெப்பர்மிண்ட்’ தேநீர்போல இதுவும் காஃபின் இல்லாத ஒரு தேநீர்.
சூப்
நன்கு அறியப்பட்ட இயற்கையான சளி, தொண்டை வலிக்குத் தீர்வு சூடான ஒரு கிண்ணம் சூப். நோய்வாய்ப்பட்டிருக்கும்போது இதமான ஓர் உணவாக சூப் திகழ்கிறது.
மூலிகை மாத்திரைகள்
தொண்டை வலிக்கு சில சமயங்களில் மூலிகை மாத்திரைகள் உட்கொள்வது தொண்டைக்கு இதமான ஒரு நிவாரணமாகும்.
பெரும்பாலான கடைகளில் மூலிகை மாத்திரைகள் எளிதாக கிடைக்கும். சிலர் மூலிகை மாத்திரைகளை சுயமாக வீட்டில் தயாரிப்பதுண்டு.
தொண்டை வலி நிவாரணத்துக்கு இயற்கையான வழிகள் இருந்தாலும், மோசமடையும் தொண்டை வலிக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்வது சிறந்தது.

