கதைக்களத்தில் எழுத்தாளர் சூர்யரத்னாவின் ‘அறம்’

2 mins read
88ca5fe1-53e2-416c-8abe-79f95e9e044d
எழுத்தாளர் சூர்யரத்னாவின் ‘அறம்’ நூலில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. - படம்: தமிழ்முரசு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1), மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.

இதில், எழுத்தாளர் சூர்யரத்னாவின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பு நூலைத் திருவாட்டி காமாட்சி அறிமுகம் செய்து பேசுவார்.

இந்நூலில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் சிங்கப்பூர்ச் சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளின் தொகுப்பாகப் புனையப்பட்டுள்ளன.

எழுத்தாளர் சூர்யரத்னாவுடன் திரு வினோத், நூல் குறித்துக் கலந்துரையாடுவார்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

ஜனவரி மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் குறித்து 140 சொற்களுக்குள் எழுதி அனுப்ப வேண்டும்.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஜனவரி மாதச் சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: (200-300 சொற்களுக்குள்)

‘ஒரே மாதத்தில் இப்படியொரு மாற்றமா?’ என நம்பவியலாமல் அவனைப்/அவளைப் பார்த்தேன்.

இளையர் பிரிவு: (300-400 சொற்களுக்குள்)

கைகளையும் கால்களையும் சங்கிலி பிணைத்திருக்க, மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்தான்.

பொதுப்பிரிவு: (400-500 சொற்களுக்குள்)

வீட்டுக்குப் போக வேண்டாம் என நினைத்த பிறகு, வீட்டைப்பற்றிய எண்ணமே மனத்தை ஆக்கிரமித்தது.

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக டிசம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/, பிரதீபா வீரபாண்டியன் - 81420220, பிரேமா மகாலிங்கம் - 91696996.

குறிப்புச் சொற்கள்