நூல் அறிமுகம்

1 mins read
2dfd468a-0ff7-4c8f-b1bf-e5395554ed5b
‘இந்தப் புத்தகம்: எதையும் மாற்றும்... எல்லாம் மாற்றும்’ நூலின் அட்டைப்படம்.  - படம்: தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்.

தலைப்பு: இந்தப் புத்தகம்: எதையும் மாற்றும்... எல்லாம் மாற்றும் நூலாசிரியர்: சி. சதிஷ்குமார் பதிப்பாளர்: சென்னை : மேன்மை வெளியீடு, 2017. குறியீட்டு எண்: 158.1 SAT அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

எழுத்தாளர் தன் முதல் வரியை ஆரம்பிக்கும் பொழுதே ஏன் இந்த நூலை வாசிக்கவேண்டும் என்று தொடங்குகிறார். முன்னேறவேண்டும், முன்னேற்ற வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட அனைவருக்குமானது இந்த நூல் என்கிறார்.

‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்ற பாரதியின் வரியைக் கொண்ட தலைப்பில் இலக்கைப் பற்றி விவரிக்கின்றார். ‘நீங்கள் யார்’, ‘விமர்சனங்களும் விடாமுயற்சியும் வளர்ச்சிக்கான விழுதுகள்’, ‘மனம் தரும் பணம்’, ‘திட்டமிடு செயல்படு வெற்றிபெறு’ போன்ற தலைப்புகளில் பலதரப்பட்ட கருத்துகளை மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் தருகிறார்.

எழுத்தாளர் பல முன்னுதாரணங்களைத் தந்திருப்பது வாசகர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் விதைக்கிறது. உதாரணமாக அன்னை திரேசா, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், விவேகானந்தர், காமராஜர், அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் போன்றவர்களின் விடாமுயற்சியையும் பொறுமையையும் சுட்டிக்காட்டுகிறார்.

எழுத்தாளரின் இந்த நூல் 40 பக்கங்களில் பல அரிய தகவல்களை வழங்குவதால் மாணவர்கள் எளிதில் வாசித்து, உள்வாங்கிக் கொள்ள பயன் உள்ளதாகக் கண்டிப்பாக இருக்கும்.

தேசிய நூலக வாரியத்துக்காக, இராமசாமி குமரேசன்

நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

குறிப்புச் சொற்கள்