உதவி

உதவி

1 mins read
fae52f68-2bd4-4658-86b8-6259247e14d2
-
Google News Preferred Icon

- டி.என்.இமாஜான்

துன்பம் நீக்கும் துணையாம் உதவி!

அன்பால் செய்யும் அரிய பணியாம்.

வாடும் உயிர்க்கு மழைபோல் சுரக்கும்;

தேடும் வேளையில் திடனாய் கிடைக்கும்.

அறியா நிலையில் அறிவைக் கொடுக்கும்;

வழியா வறுமையில் வளத்தைக் கொடுக்கும்.

எளிய மனிதர்க்கெல்லாம் ஏற்றம் தருமே;

ஒளியாய் நெஞ்சில் உயர்வை உறுதியாக்குமே!

பயனைக் கருதாது பகிரும் மனமே

உயர்ந்த பண்பாம் உதவி ஆகுமே!

வாழும் நாளில் வாரி வழங்கிட

நாளும் பெருகும் நல்ல புகழே!

ஈதல் அறமே இன்பம் நல்கும்;

காயும் துயரைக் கணத்தில் போக்கும்.

தளர்ந்த நடையைத் தாங்கிப் பிடிக்கும்;

வளர்ந்த அன்பை உலகுக்கு உணர்த்தும்.

இதயக் கதவை இதமாய்த் திறப்போம்!

உதவி செய்ய என்றும் விரைவோம்!

மனிதம் வாழ வழிகள் அமைப்போம்!

இனிதே வாழும் உலகம் படைப்போம்!