லதா
பச்சைப் பசேலென்று மரங்களும் செடிகளும் இருக்கும், இருக்காது
வழியில் போவோர் ஹலோ சொல்வார்கள், சிலவேளை செயின் பறிப்போ, பர்ஸ் திருட்டோ நடக்கும்.
வழிகேட்டால் கெட்ட வார்த்தை வரலாம்.
வீட்டுக்கு அழைத்துக் கொண்டாடுவதும் உண்டு.
முகத்துக்கு நேரே துப்பாக்கி/கத்தி/சொல் ஏதோ ஒன்று.
உங்கள் கண்கள் எவ்வளவு அழகு என்று செஃல்பியும் எடுப்பார்கள்.
தேநீரோடு ஈக்களும் வரும்
வீதிகள் ஆடி, பாடி, சிரித்து...
அழுதுகொண்டும் இருக்கும்
போர்க் காலத்தில் குச்சித் துப்பாக்கி செய்து
வீட்டை அள்ளிச் சென்ற வெள்ளத்தில் இலைக் கப்பல்கள் விட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
