தீப ஒளித் திருநாளில் இன்ப ஒளி பரவட்டும்! மண்விளக்கு சுடர்போலே மனவிளக்கு ஒளிரட்டும்! இதயச்சுடர் ஒளியாலே இல்லாமை நீங்கட்டும்! கருணைச்சுடர் ஒளியாலே வளங்கள் ஓங்கட்டும்! நம்பிக்கை ஒளியாலே நல்வழி பிறக்கட்டும்! ஒளிமயமாய் எதிர்காலம் இனிப்பாகச் சிறக்கட்டும்! இன்ப ஒளி வீச இதயங்களைப் போற்றிடுவோம்! அன்பெனும் தீபத்தை அகிலமெலாம் ஏற்றிடுவோம்!
- அனுபமா உதிவ்
