தீபாவளி

தீபாவளி

fallback-0

08 Nov 2026 - 5:45 am

1 mins read

முதல் காதல் வெற்றி

ஆணுக்குத் தீபாவளி

பள்ளி விடுமுறை

பிள்ளைகளுக்குத் தீபாவளி

பிள்ளைகளுடன்

கழிக்கும் நேரம்

பெரியோர்க்குத் தீபாவளி

அறுவடை நாளே

உழவர்க்குத் தீபாவளி

சம்பள உயர்வே

உழைப்போர்க்குத் தீபாவளி

பந்தியே

பசித்தோர்க்குத் தீபாவளி

உதவி கிடைத்தால்

வறியவர்க்குத் தீபாவளி

வாரி வழங்குதலே

வாழ்வோர்க்குத் தீபாவளி

வெற்றியே

வீரனுக்குத் தீபாவளி

பேரன்பு கிடைத்தால்

பெண்ணுக்குத் தீபாவளி

அமைதியே

பேருலகத்துக்குத் தீபாவளி!

குறிப்புச் சொற்கள்