செயற்கை நுண்ணறிவு விடையன்று, வழிகாட்டியே!

செயற்கை நுண்ணறிவு விடையன்று, வழிகாட்டியே!

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 7:54 am

2 mins read

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில், அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்த மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி போன்ற கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது; பள்ளிப் பாடங்களிலும் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தி வருகிறது.

அந்த முயற்சி தற்போது பாலர் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இயந்திர மனிதர்களுக்கு நடன அசைவுகளைக் கற்றுக்கொடுத்தல், மின்னிலக்கச் செல்லப் பிராணிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பாலர் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

பிஞ்சுகளுக்குச் செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியைச் சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் வரவேற்கின்றனர்.

ஆயினும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நம்பகத்தன்மை இல்லாத பொய்ச் செய்திகளைப் பரப்புவது, போலியான படங்களை உருவாக்குவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவது கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், சிறுவயதிலேயே செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்வது அவசியமா எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பிள்ளைகளே, நீங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பாடம் குறித்த ஐயங்களுக்கான தீர்வு

பள்ளிப்பாடங்கள் தொடர்பான ஐயங்களைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், வீட்டுப்பாடத்தைச் செய்து முடிக்குமாறு கேட்பது முறையன்று. 

செய்திகளின் உண்மைத்தன்மை

செயற்கை நுண்ணறிவு வழங்கும் தகவல்களையும் செய்திகளையும் பகுத்தாய்வது நல்ல பழக்கமாகும். ஏனெனில், அது பொய்ச் செய்திகளை வழங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

படைப்பாற்றலும் புத்தாக்கமும்

செயற்கை நுண்ணறிவு பல செயல்பாடுகளை எளிமையாக்கியுள்ளது. ஆனால், மனிதரிடம் உள்ள புத்தாக்கச் சிந்தனையும் படைப்பாற்றலும் அதனைவிடச் சிறந்தது. ஆகவே, அத்திறன்களை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும்.

குறிப்புச் சொற்கள்