தமிழ் கற்றலுக்காக இலவசத் தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகம்

தமிழ் கற்றலுக்காக இலவசத் தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகம்

படம்: பி.எம்.ஏ. அமானுல்லாஹ் 

01 Oct 2026 - 8:06 pm

1 mins read

கணினி அல்லது கைப்பேசி இல்லாத நேரங்களிலும், தமிழ் மொழி கற்றலை சிறுவர்கள் கரிக்கோலைக் கொண்டு தாளில் எழுதிப் பழகுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதைக் கல்வியாளர் பி.எம்.ஏ. அமானுல்லாஹ் வடிவமைத்துள்ளார். பாலர் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இந்தப் பாடப்பயிற்சி அடிப்படைத் தேவையுள்ள ஒன்று.

இலவச தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகத்தின் ஒரு பக்கம்.
இலவச தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகத்தின் ஒரு பக்கம். - படம்: பி.எம்.ஏ. அமானுல்லாஹ் 

“மாணவர்கள் பள்ளியில் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கும்போது, தாளில் கரிக்கோலைக் கொண்டு எழுத்துகளை எழுதிப் பழகுவர். இந்தக் கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு, பெற்றோர்கள் இந்த புத்தகத்தை அச்சிடக்கூடிய வடிவில் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து, இந்தச் சிறு புத்தகத்திற்கான யோசனை தோன்றி, நான் அதனை உருவாக்கினேன்,” என்று கல்வியாளர் பி.எம்.ஏ. அமானுல்லாஹ் கூறினார்.

ஏறக்குறைய 30 முதல் 35 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில், இளம் மாணவர்களுக்கு ஏற்றவாறு உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், சூழல் சார்ந்த சிறிய வார்த்தைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதனை ‘https://sorkkal.com/66_download_tracing_book.html’ என்ற இணையவாசல் மூலம் இலவசமாகத் தரவிறக்கம் செய்து அல்லது அச்சிட்டோ பயன்படுத்தலாம்.

மேலும், கணினி, மடிக்கணினி போன்ற பல வகை மின்னிலக்க கருவிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலவச தமிழ் எழுத்துப் பயிற்சி.
இலவச தமிழ் எழுத்துப் பயிற்சி. - படம்: பி.எம்.ஏ. அமானுல்லாஹ் 

அந்தப் புதிய தமிழ் எழுத்துப் பயிற்சிப் புத்தகத்திற்குப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை ஒரு புத்தகம் போல செய்து, வாகனப் பயணங்களின்போதும் மற்ற எல்லா நேரங்களிலும் எளிய முறையில் பயன்படுத்துவதாகப் பெற்றோர்கள் வாட்ஸ்அப் வழியாக திரு பி.எம்.ஏ. அமானுல்லாஹ்விடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்