ஒலிம்பிக் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்

ஒலிம்பிக் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்

2 mins read
eac18ed1-eb6d-4cda-99bd-024cc38e5749
புதிய சின்னம். - படம்: ஊடகம்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் சின்னத்தின் பெயர் ஃபிரைஜ்.

இது சுதந்திரத்தின் சின்னம்மாகத் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சின்னத்தின் நிறமானது நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டின் மூவர்ணக் கொடியின் நிறங்களைக் கொண்டது. அதோடு அந்த ஃபிரைஜின் நடுவில் தங்க நிறத்திலான பாரிஸ் 2024 லோகோ இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய கிரீஸ் நாட்டில் கி.மு. 776ல் ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்கின என்று கூறப்பட்டாலும் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ல்தான் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் துவங்கின.

ஒலிம்பிக் கொடியில் வெள்ளைப் பின்னணியில் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிற வட்டங்கள் இருப்பதற்குக் காரணம் இவற்றில் ஏதாவது ஒரு நிறமாவது அனைத்து நாட்டு தேசியக் கொடிகளிலும் இடம்பெற்றிருக்கும் என்பதால்தான்.

1896 ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டம் அறிமுகமானது. அப்போது ஓட வேண்டிய தொலைவு 40.23கி.மீ. ஆனால், தற்போது மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 42.195 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் நவீன ஒலிம்பிக்கில் நடந்த 43 போட்டிகளில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 வீரர்கள் பங்கேற்றனர். 1900 முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதற்கு முன் கிரீசில் உள்ள ஜெரா கோயில் வளாகத்தில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்படும் முறை பாரம்பரியமானது. சூரிய ஒளியை, கண்ணாடி மூலமாக திசை திருப்பி, தீபத்தை வெப்பமூட்டி, பற்றச் செய்வதுதான் மரபு.

ஜார்ஜ் லூயிஸ் ஐசர் என்பவர் 1904ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் ஆவார். இவருக்கு கால் ஊனம் காரணமாக மரத்தால் ஆன கால் பொருத்தப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ஒரே நாளில்

தொடர்புடைய செய்திகள்

6 பதக்கங்களைப் பெற்று சாதனை புரிந்தார்.

1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்), 2020 (கொவிட் 19) ஆகிய ஆண்டுகளில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் பேட்டிகள் நடைபெறவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரபூர்வ மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போட்டி நடக்கும் நாட்டின் மொழி.

ஜானி விஸ்முல்லர் ஒரு விளையாட்டு வீரர். இவர் பன்னிரெண்டு முறை ஹாலிவுட்டின் ‘டார்ஜான்’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1920களில் ஒலிம்பிக்சில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை அவர் வென்றது நடிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இரண்டு ஜப்பானிய விளையாட்டு வீரர்கள் ‘போல்வால்ட்’ (Pole Vault) என்ற கோலூன்றித் தாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். அவர்களுக்கிடையே மீண்டும் போட்டி நடத்தி, இரண்டாமிடம் பெற்றவரைத் தீர்மானிப்பதற்கு பதிலாக வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பாதியாக வெட்டி, ஆளுக்கு அரை வெள்ளிப் பதக்கமும் அரை வெண்கலப் பதக்கமும் ஒட்ட வைத்து இருவருக்கும் கொடுத்தது வியப்பான செய்தியாகும்.

குறிப்புச் சொற்கள்