விடுமுறையில் ரவியும் அவனுடைய பாட்டியும் பொங்கல் சந்தைக்குச் சென்றனர்.
பொங்கல் சந்தை கூட்டமாக இருந்தது. அதனால், ரவி அவனுடைய பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டான். ரவியின் அம்மா வேலை முடிந்து பொங்கல் சந்தைக்குச் சென்று, அவர்களைச் சந்தித்தார்.
கடைகளுக்கு வெளியே நடந்துசென்றபோது, ரவி அங்கிருந்த பொருள்களை வேடிக்கை பார்த்தான்.
ரவியின் அம்மா பொங்கல் பண்டிகைக்குத் தேவையான வண்ணப் பானை, கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, உணவுப் பொருள்கள் போன்றவற்றை வாங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று, திருடன் ஒருவன் பாட்டியிடமிருந்த கைப்பையைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடினான்.
பாட்டி உடனே, “திருடன்! திருடன்!” என்று சத்தமாகக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டுக் கடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தார்கள்.
பாட்டி உடனே ஒரு பொங்கல் பானையை எடுத்துத் திருடனை நோக்கி வீசினார். ரவி திருடனைப் பிடிக்க ஓடத் தொடங்கினான்.
பானை திருடனின் தலையில் பட்டது. திருடன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். பானையும் உடைந்தது. ரவியும் அங்கிருந்த மற்றவர்களும் திருடனைப் பிடித்தார்கள்.
திருடன் பாட்டியின் கைப்பையைத் திருப்பிக் கொடுத்தான். அவன் பாட்டியிடம் மன்னிப்புக் கேட்டான். பாட்டி அவனை மன்னித்தார்.
