இந்திய மரபுடைமைக் கலைகள் விழா
1 mins read
‘நமது தெம்பனிஸ் நடுவத்தில்’ பார்வையாளர்கள் கலந்துகொண்ட சாதனை நிகழ்ச்சிகளான பெருந்திரள் கோலாட்ட நடனமும் இந்தியப் பாரம்பரிய நாட்டுப்புற தாளவாத்தியங்களின் ஆகப் பெரிய கலவையும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 13) நடைபெற்றன. (படம்: த.கவி) - படம்: த.கவி
வெவ்வேறு கலைப்பள்ளிகள், குழுக்கள், இந்திய நற்பணி செயற்குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 522 கலைஞர்கள், பெருந்திரள் கோலாட்ட நடனத்தைப் படைத்தனர். சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் ஆகப்பெரும் கோலாட்டத்தைப் பதிவு செய்வதே இவர்களது நோக்கம். (படம்: த.கவி) - படம்: த.கவி
பல்வேறு மொழிப்பிரிவுகளைச் சேர்ந்த இந்திய இனத்தவர்களில் பல தலைமுறை சிங்கப்பூரர்கள், புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் என இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் பல தரப்பினர் ஒன்றிணைகின்றனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
சமூக ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைப்பையும் போற்றும்வண்ணம் பல பிரிவுகளைச் சேர்ந்த இந்திய இனத்தவர்கள் ஒரு மக்களாய் இணைந்து ஆடுகின்றனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் பெருந்திரள் கோலாட்டத்தைப் பதிவு செய்வதற்காக ஒன்றுகூடிய வெவ்வேறு கலைப்பள்ளிகள், குழுக்கள், இந்திய நற்பணி செயற்குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 522 கலைஞர்கள்.(படம்: த.கவி) - படம்: த.கவி
சக கலைஞர்களுடன் புன்னகையுடன் கோல்கலைத் தட்டும் மாது. - படம்: த.கவி
‘மஹாராஷ்ரா மண்டல் சிங்கப்பூர்’ அமைப்பைச் சேர்ந்த இளையர்கள், ‘டோல்’, ‘டாஷா’ உள்ளிட்ட மேள இசைக் கருவிகளை வாசிக்கின்றனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
இந்தியப் பாரம்பரிய நாட்டுப்புற தாளவாத்தியங்களின் ஆகப் பெரிய கலவைக்கான சாதனை முயற்சியின் அங்கமாக ‘டமரு’ குழுவைச் சேர்ந்த கலைஞர்கள், பறையுடன் நாட்டுப்புற இசைக்கருவிகளை வாசித்தனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
மேளங்களை முறுக்குடன் அடித்துவரும் மங்கையர்கள். (படம்: த.கவி) - படம்: த.கவி
சிங்கப்பூர் மலையாளி சங்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சண்ட மேளம் வாசிக்கின்றனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான துணை அமைச்சர் எல்வின் டான், சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை அளித்தார். திரு டான் வாசித்துக்கொண்டிருந்த பறை, அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. (படம்: த.கவி) - படம்: த.கவி
கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான துணை அமைச்சர் எல்வின் டான், சாதனைச் சான்றிதழ்களை வணங்குகிறார். (படம்: த.கவி) - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

