கூரை மீது பாதுகாப்புக் கவசமின்றி நின்றிருந்த ஊழியர்கள்; அமைச்சு விசாரணை

கூரை மீது பாதுகாப்புக் கவசமின்றி நின்றிருந்த ஊழியர்கள்; அமைச்சு விசாரணை

1 mins read

சிங்கப்பூரில் கிளப் ஸ்திரீட்டில் உள்ள கட்டடத்தின் கூரை மீது பாதுகாப்புக் கவசங்கள் ஏதுமின்றி இரு ஊழியர்கள் நின்று கொண்டிருந்ததன் தொடர்பில் மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி மதிய உணவு வாங்குவதற்காக வெளியில் சென்ற ஸ்டோம்ப் வாசகர் கெ, ஒரு கட்டடத்தின் கூரை மீது இருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

அவர்கள் பாதுகாப்பு கவசம் ஏதும் அணியாமல் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டார் கெ.

"இது மிகவும் அபாயகரமானது," என்று குறிப்பிட்ட அவர், "உயரமான இடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிகிறார்கள். ஆபத்தானது," என்றார்.

-

இந்தச் சம்பவம் பற்றித் தெரியும் என்று ஸ்டோம்பிடம் குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, அதன் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டது.

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றி புகார் அளிக்க விரும்புவோர் SnapSAFE கைபேசிச் செயலியைப் பயன்படுத்துமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்