கேட்கும் திறனைச் சோதிக்கும் நடமாடும் மருந்தகங்கள்

1 mins read
ef7c7210-033f-4a9c-be02-80b92805d763
புக்கிட் பாத்தோக் பலதுறை மருந்தகத்தில் கேட்கும் திறனை மதிப்பிடும் ஒரு நோயாளி. - படம்: தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் கேட்கும் திறன் தொடர்பான சுகாதாரச் சேவைகளை மேலும் எளிதில் பெறலாம்.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் சமூக கேட்கும் திறன் ஆய்வுச் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டது அதற்குக் காரணம்.

ஜூரோங் மருத்துவ நிலையத்தில் புதிய கேட்கும் திறன் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் புக்கிட் பாத்தோக், சுவா சூ காங், குவீன்ஸ்டவுன் ஆகிய மூன்று பலதுறை மருந்தகங்களில் அத்தகைய நடமாடும் மருந்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கேட்கும் திறன் தொடர்பில் அடிப்படை, விரிவான மதிப்பீடுகள், கேட்கும் திறன் கருவிகளை மதிப்பாய்வு செய்தல், பொருத்தும் சேவைகள், மறுவாழ்வுச் சேவைகள் உள்ளிட்டவை அந்த மருந்தகங்களில் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு புதிய நடமாடும் மருந்தகத்தையும் மூவர் நிர்வகிப்பர். தள்ளுவண்டிகளைப்போல் இயங்கும் அவற்றில் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்