சிங்கப்பூரில் கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பொழிந்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று தொடங்கிய காற்று, மழை நேற்றும் தொடர்ந்தது.
நேற்று காலை முதலே இடியுடன் பொழிந்த கனமழை, மாலையில் சற்றுத் தணிய ஆரம்பித்தது.
இன்று காலையில் மழைப்பொழிவு குறைந்திருந்தாலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் 318.6 மிமீ. மழை சாங்கியில் பதிவானது. பொதுவாக ஜனவரியில் சராசரி மழைப்பொழிவு 238.3 மிமீட்டராக இருக்கும்.
அதேபோல நேற்றும் கனமழை காரணமாக 210,6 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது.
நேற்று காலை மழைப்பொழிவு 184.4 மி.மீட்டராக இருந்தபோது, கடந்த 39 ஆண்டுகளில் பதிவான கனமழை நாட்களின் முதல் ஒரு விழுக்காட்டில் இது ஒன்று என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
மழை வெள்ளத்தைக் கையாள சிங்கப்பூரர்வாசிகளுக்கு உதவும் பணிகளை கழகம் முடுக்கிவிட்டது.
நேற்று மாலை ஆகக் குறைவான வெப்பநிலையாக 21.1 டிகிரி செல்சியஸ் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

