‘இதயங்கனிந்த வாரயிறுதி’ அறநிகழ்வில் $1.28 மி. நிதி திரட்டப்பட்டது

‘இதயங்கனிந்த வாரயிறுதி’ அறநிகழ்வில் $1.28 மி. நிதி திரட்டப்பட்டது

2 mins read
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறும்
295547f8-1092-4580-928b-b2bdf6baddb8
‘டீம் சீங்கா லெஜன்ட்ஸ்’ குழுவின் உள்ளூர் காற்பந்து சகாப்தம் ஃபாண்டி அமாட் சக குழுவினரான பாஸ்ருல் நவாசிடம் பந்தை அனுப்புகிறார். நாடாளுமன்றக் குழுவைப் பிரதிநிதித்த கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (சிவப்பு சீருடை) அவருக்கு பின்னால் உள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

விளையாட்டுகளின் வழியான சமூக ஒருங்கிணைப்பை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தேசிய விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் நிகழ்ச்சி உற்சாகமாக சனிக்கிழமை (ஏப்ரல் 25) தொடங்கியது.

சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சிங்கப்பூர் காற்பந்து சங்கம் (எஃப்ஏஎஸ்), ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி அமைப்பு, பந்தயப்பிடிப்பு கழகம் (டொட்டி போர்ட்) ஆகியவையும் ஏற்பாட்டில் இணைந்து உதவின.

‘Weekend With A Heart’ என்ற தலைப்பில் கனிவான இதயத்துடன் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் முக்கிய அங்கமாக சிறப்பு ‘Football With a Heart’ காற்பந்து போட்டி 11வது ஆண்டாக நடைபெற்றது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்த குழுவும் நாட்டின் முன்னாள் காற்பந்து வீரர்களை உள்ளடக்கிய ‘டீம் சிங்கா லெஜண்ட்ஸ்’ குழுவும் உள்ளடங்கிய மொத்தம் 58 வர்த்தக நிறுவனங்களின் குழுக்கள் காற்பந்து போட்டியில் பங்கேற்றன.

இந்த விளையாட்டுப் போட்டியில் $1.28 மில்லியன் நிதி நன்கொடையாகத் திரட்டப்பட்டது.

நாடாளுமன்ற அமைச்சர்கள்

போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் சிறப்பு வருகையாளராகக் கலந்துகொண்டு நிதி திரட்டு முயற்சியைப் பாராட்டினார். கடந்த 2024ஆம் ஆண்டில் கிடைத்த $1.25 மில்லியனைவிட இவ்வாண்டு அதிக நிதி திரட்டப்பட்டது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் எட்வின் டோங், டேவிட் நியோ ஆகியோர் அங்கம் வகித்த நாடாளுமன்ற குழுவுடன் காற்பந்து சகாப்தம் ஃபாண்டி அமாட், நஸ்ரி நசீர் போன்ற உள்ளூர் நட்சத்திரங்கள் போட்டியிட்டு விளையாடியது பார்வையாளர்களை பரசவப்படுத்தியது.

இந்நிகழ்வில் திரட்டப்பட்ட நிதி மைன்ட்ஸ் (MINDS), ஸ்போர்ட்ஸ் கேர்ஸ் (SportCares) உள்ளிட்ட ஆறு இளையர் நல அமைப்புகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.

பலவித விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

காற்பந்து மட்டுமின்றி பூப்பந்து, வலைப்பந்து போன்ற மற்ற விளையாட்டுகளும், இளையோருக்கான விழிப்புணர்வு அரங்குகளும் இரண்டு நாள்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ‘மொபைல் லெஜன்ட்ஸ்’ மின்-விளையாட்டுப் போட்டியும் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்