துப்பாக்கிக்காரன் பற்றிய தகவலுக்கு $1 மில்லியன் வெகுமதி: ஆஸ்திரேலியா

1 mins read
1f6461c4-f771-4ee2-8716-cfa195acaf92
டெஸ்மண்ட் ஃபில்பி என்று அறியப்படும் ஃபிரீமன் பற்றி தகவல் அளிப்போருக்கு $1 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: இரண்டு காவல்துறை அதிகாரிகளைக் கொலைசெய்ததாக நம்பப்படும் துப்பாக்கிக்காரர் குறித்து தகவல் அளிப்போருக்கு $1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வெகுமதியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கொலைசெய்ததாக நம்பப்படும் 56 வயது டேசி ஃபிரீமன், 11 நாள்களாகத் தலைமறைவாய் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

டெஸ்மண்ட் ஃபில்பி என்று இதற்குமுன் அறியப்படும் ஃபிரீமனை விக்டோரியா மாநிலத்தில் 450க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஃபிரீமன் சுட்டதில் மூன்றாவது அதிகாரி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் குற்றங்கள், பிள்ளை விசாரணைக் குழு உறுப்பினர்கள் உட்பட 10 காவல்துறை அதிகாரிகள் ஃப்ரீமனைக் கைதுசெய்ய புறநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றபோது ஃபிரீமன் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக நம்பப்படும் ஃபிரீமனை உள்ளூர் ஊடகங்கள் அரசாங்கத்தை முறைகேடானது என்று நினைக்கும் குடிமகன் என்று வருணித்தனர்.

ஃப்ரீமன் தற்போது ஆள் அரவமற்ற பகுதியில் தனியாகவோ துணையுடனோ இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்