தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர் சேர்க்கை: பத்துத் தொடக்கப் பள்ளிகளில் பாதி இடங்கள் நிரம்பிவிட்டன

2 mins read
5948ed3b-6813-4c8f-8fda-94013c0bf7c6
தொடக்கநிலை 1க்கான முதலாம் கட்ட மாணவர் சேர்க்கைப் பதிவு ஜூலை 2 முதல் 4ஆம் தேதிவரை இடம்பெற்றது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கப் பள்ளிகளில் தொடக்கநிலை 1க்கான முதலாம் கட்ட (Phase 1) மாணவர் சேர்க்கை நடவடிக்கையின்போதே பத்துப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பாதி இடங்கள் நிரம்பிவிட்டன.

முதலாம் கட்டச் சேர்க்கை புதன்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடைந்தது. ஏற்கெனவே பயிலும் பிள்ளைகளின் உடன்பிறந்தோருக்கான முதலாம் கட்டச் சேர்க்கைப் பதிவு ஜூலை 2 முதல் 4ஆம் தேதிவரை இடம்பெற்றது.

இந்நிலையில், ஃபெர்ன் கிரீன், நேவல் பேஸ், ஒயாசிஸ், சிஃபா, செங்காங் கிரீன், ஸ்பிரிங்டேல், வாலர், வாட்டர்வே, வெஸ்ட் ஸ்பிரிங், உட்லண்ட்ஸ் ரிங் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பாதி இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்வி அமைச்சு இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்காங்கிலுள்ள ஸ்பிரிங்டேல் தொடக்கப் பள்ளியில் 57 விழுக்காட்டு இடங்கள் நிரம்பிவிட்டன. அடுத்ததாக 2ஏ கட்டச் சேர்க்கைக்கு அப்பள்ளியில் 59 இடங்கள் உள்ளன.

பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர், பள்ளியின் ஆலோசனை அல்லது நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெற்றோர் அல்லது பள்ளி ஊழியர் ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் அதே பள்ளியின்கீழ் செயல்படும் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளும் 2ஏ கட்டச் சேர்க்கைக்குப் பதிவுசெய்யலாம்.

மொத்தமுள்ள 181 தொடக்கப் பள்ளிகளிலும் 2ஏ கட்டச் சேர்க்கைக்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விவரம் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2பி, 2சி கட்டச் சேர்க்கைக்கான 60 இடங்களை அது உள்ளடக்காது.

வரும் 2028ஆம் ஆண்டில் தெங்காவிற்கு இடமாறும் என எதிர்பார்க்கப்படுவதால் கிராஞ்சி தொடக்கப் பள்ளி அப்பட்டியலில் இடம்பெறவில்லை. அப்பள்ளியில் 2024 முதல் 2026 வரைக்கும் தொடக்கநிலை 1ல் மாணவர் சேர்க்கை இடம்பெறாது.

2ஏ கட்ட மாணவர் சேர்க்கை ஜூலை 11 வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி, ஜூலை 12 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு முடிவுறும். அதன் முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும்.

குறிப்புச் சொற்கள்