$239,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது; 10 சிங்கப்பூரர்கள் கைது

1 mins read
f7de8e2c-09d2-49c8-baa5-8447f5e91744
படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு -

மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு நடத்திய சோதனையில் 239,000 வெள்ளி மதிப்புடைய போதைப்பொருள் பிடிபட்டது.

சோதனையின் போது 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.

சோதனை நடவடிக்கைகள் ஏப்ரல் 27, 28 நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சோதனையின் போது கிட்டத்தட்ட 3.3 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வயது 35க்கும் 57க்கும் இடைப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஆயுதம், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் $36,000க்கும் மேற்பட்ட ரொக்கம் முதலியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்