பொங்கோல் சமூக மன்ற அரங்கில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை 5 மணிக்கு ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் 106வது மாதாந்தரச் சந்திப்பு நடைபெறவுள்ளது. வழக்கமான இலக்கியச் சிற்றுரைகள், தாய்-சேய் இணைந்து படைக்கும் ‘வேரும் விழுதும்’ போன்ற அங்கங்கள் அந்த நிகழ்வின்போது இடம்பெறும்.
இந்த மாதச் சந்திப்பில், கடலூரிலிருந்து முனைவர் ஜெ. தேவசேனா ‘சங்ககால மலர்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையும் திருமதி கற்பகலட்சுமி, திருமதி தீபிகா ஆகியோர் ‘விடுதலை’ எனும் தலைப்பில் சிற்றுரைகளும் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி ‘சால்பு’ என்ற தலைப்பில் அறிமுக உரையும் ஆற்றவுள்ளனர்.
அத்துடன், சிறார் உலகநீதி எனும் கருப்பொருளிலும் பெரியவர்கள் விடுதலை எனும் கருப்பொருளிலும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.
மேல் விவரங்களுக்கு பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியை 9228 8544 என்ற எண்ணில் அழைக்கலாம்.


