11.11 விலைக்கழிவு: போலிக் கடைகளை அகற்றிய ‌ஷாப்பி, லசாடா

11.11 விலைக்கழிவு: போலிக் கடைகளை அகற்றிய ‌ஷாப்பி, லசாடா

படம்: சாவ்பாவ்

11 Nov 2026 - 8:29 pm

1 mins read

பெரிய மின்வர்த்தக நிறுவனங்களான ‌ஷாப்பி, லசாடா இரண்டும் நவம்பர் 11ஆம் தேதி11.11 விலைக்கழிவு நிகழ்வை முன்னிட்டு தங்கள் தளங்களில் காணப்பட்ட குறைந்தது 20 போலிக் கடை முகப்புகளை அகற்றியுள்ளன.

அவை, அத்தளங்களில் தங்கள் பொருள்களை விற்கும் நம்பகமான வர்த்தகங்களைப் போல் நடிக்கும் ஏமாற்றுக் கடைகளாகும். போலிக் கடைகளுக்கு எதிராகத் தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதை இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியதாக சீன ஊடகமான சாவ்பாவ் தெரிவித்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ‌ஷாப்பி பேச்சாளர் ஒருவர், புகாரளிக்கப்பட்ட போலிப் பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் போலி விற்பனைக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“அறிவுசார் சொத்து உரிமைகளை ஊடுருவும் பதிவுகளுக்கும் கடைகளுக்கும் எங்கள் தளங்களில் இடம் கிடையாது,” என அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

போலியான அல்லது தவறான கண்ணோட்டத்தைத் தரும் இணையக் கடைகள் குறித்த புகார்களுக்குத் தாங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குவதாக லசாடாவின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

11.11 விலைக் கழிவை முன்னிட்டு தங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான பொருள் வாங்கும் அனுபவத்தை வழங்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். லசாடாவின் கொள்கைகளை மீறியதாக அடையாளம் காணப்பட்டுள்ள கடைகளை அகற்றுவது அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்