பிராஸ் பசார் சாலையில் சாய்ம்சுக்கு வெளியே வியாழக்கிழமை (ஜூன் 5) காலை சாலை விபத்து நிகழ்ந்தது.
11 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
அவற்றில் ஆறு கார்கள், மூன்று டாக்சிகள், இரண்டு பேருந்துகள் அடங்கும்.
மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
44 வயது கார் ஓட்டுநர், அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த 49 வயது பெண், 58 வயது டாக்சி ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
காலை 9.40 மணி அளவில் விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.