டோட்டோ குலுக்கலில் வெற்றிபெற்ற மூவர் பரிசுத் தொகையான 12.4 மில்லியன் வெள்ளியைத் தங்களுக்கிடையே பகிர்ந்துகொள்வர்.
கடந்த மூன்று டோட்டோ குலுக்கல்களில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை.
புதன்கிழமை (அக்டோபர் 23) நடந்த டோட்டோ குலுக்கலில் வெற்றிபெற்ற எண்கள் 7, 14, 17, 18, 31, 38, உபரி எண் 46.
பரிசுத் தொகை முதலில் இம்மாதம் 13ஆம் தேதி சுமார் 1.3 மில்லியன் வெள்ளியாக இருந்தது. பிறகு இம்மாதம் 20ஆம் தேதி அத்தொகை நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்து 5.8 மில்லியன் வெள்ளியானது.
முதல் பிரிவுப் பரிசுத் தொகையைப் பெற குலுக்கல் சீட்டில் ஆறு எண்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். வெற்றியாளர் யாரும் இல்லாதிருந்தால் நான்காவது முறையாக குலுக்கல் நடைபெறும் வரை பரிசுத் தொகை தொடர்ந்து அதிகரிக்கும். அந்த பரிசுத் தொகை இரண்டாம் பிரிவில் வெற்றிபெறுவோரிடையே பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்தக் குலுக்கலில் வெற்றிபெற்ற மூவரும் சிங்கப்பூர் பூல்ஸ் பந்தயப் பிடிப்புச் சேவை மூலம் குலுக்கல் சீட்டுகளை வாங்கினர். சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

