தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$12.7 மில்லியன் டோட்டோ; 12 அதிர்ஷ்டசாலிகள்

2 mins read
d4da09e2-0e14-45c2-ba02-4544c344e0c8
கடந்த மூன்று குலுக்கல்களில் குரூப் 1ல் யாரும் வெற்றி பெறாததால் 4வது குலுக்கலில் பரிசுத் தொகை $12.7 மில்லியனாக அதிகரித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் நடந்த டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கலில் ஆகப்பெரிய தொகையான 12.7 மில்லியன் வெள்ளியை 12 அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்துகொண்டனர்.

சென்ற வெள்ளிக்கிழமை (ஜூலை 17 ) டோட்டோ குலுக்கல் நடைபெற்றது.

இதில் குரூப் 1ல் யாரும் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்ததாக குரூப் 2ல் 12 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தலா 1.2 மில்லியன் வெள்ளி பகிர்ந்து அளிக்கப்படவிருக்கிறது.

வெற்றி எண்கள் 7,8,17,29,32,42. கூடுதல் எண் 1.

கடந்த மூன்று குலுக்கல்களிலும் யாரும் வெற்றி பெறாததால் பரிசுத் தொகை 12.7 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்தது.

குருப் 1க்கான பரிசுத் தொகை நான்காவது குலுக்கல் வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு குரூப் 2ல் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.

இம்முறை அதிர்ஷ்ட சீட்டுகள் தெம்பனிஸ் ஸ்திரீட் 21, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள மளிகைக் கடை, தோ பாயோ லோரோங் 1ல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடை உள்ளிட்ட கடைகளில் வாங்கப்பட்டுள்ளன. அதிர்ஷ்ட சீட்டுகள் ஒருவர் வாங்கியதா அல்லது பலர் கூட்டாக வாங்கியதா என்பது தெரியவில்லை.

குரூப் 3ல் 609 பேர் தலா 1,658 வெள்ளியை வென்றுள்ளனர்.

இதற்கு முன்பு ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் குரூப் 1ன் பரிசுத் தொகை ஏறக்குறைய 1.2 மில்லியனாகவும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் குரூப் 1ன் பரிசுத் தொகை ஏறக்குறைய 2.9 மில்லியனாகவும் இருந்ததை சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் இவை இரண்டிலும் குரூப் 1ல் யாரும் வெற்றி பெறவில்லை.

ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலிலும் குரூப் 1ல் யாரும் வெற்றி பெறவில்லை. அதன் மொத்த பரிசுத் தொகை 5.8 மில்லியன் வெள்ளியாகும்.

கடைசியாக ஜூன் 19ஆம் தேதி $10 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்ட டோட்டோ குலுக்கல் நடைபெற்றது. அப்போது ஒரே ஒரு சீட்டு $12.3 மில்லியன் டோட்டோ ஜாக்பாட்டை வென்றது.

குறிப்புச் சொற்கள்