தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணனைக் கத்தியால் வெட்டி படுக்கையறைக்குத் தீமூட்டிய ஆடவருக்குச் சிறை

1 mins read
46bf4bc2-e9dd-4d71-9abe-2a43b9f4ab71
டேனியல் ஃபோக் மிங் சாய்க்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்ணன் மீது கோபப்பட்டு அவரைக் கத்தியால் வெட்டி, அவரது படுக்கையறைக்குத் தீமூட்டிய ஆடவருக்கு செப்டம்பர் 19ஆம் தேதியன்று 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பல் துலக்க தாம் பயன்படுத்தும் பற்குச்சம் மீது தமது அண்ணன் அவரது சாதனங்களை வைத்ததற்காகவும் வீட்டில் உள்ள வைஃபை இணைப்பை அணைத்ததற்காகவும் சினங்கொண்ட 28 வயது டேனியல் ஃபோக் மிங் சாய் இக்குற்றங்களைப் புரிந்தார்.

இக்குற்றங்களை ஃபோக் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்தை ஃபோக் ஒப்புக்கொண்டார்.

ஃபோக்கின் 32 வயது அண்ணனின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டன.

அவரது முன்கை தசைநார், வலது கையில் உள்ள விரல்களின் நரம்புகள் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டன.

அக்காயங்கள் காரணமாக அவருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் ஃபோக்கின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அவர் நான்கு நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.

அவருக்கு 40 நாள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்