தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$15.4 மில்லியன் மோசடி; 335 பேரிடம் விசாரணை

1 mins read
6ea22850-2316-4f72-abbc-cba175e1c5f5
விசாரணையில் உள்ள 335 பேரில் 119 பேர் பெண்கள் என்றும் 216 பேர் ஆண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 15.4 மில்லியன் வெள்ளி மோசடியில் ஈடுபட்டச் சந்தேகத்தில் 335 பேரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் உள்ள 335 பேரில் 119 பேர் பெண்கள் என்றும் 216 பேர் ஆண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் வயது 16க்கும் 81க்கும் இடைப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் இரண்டு வாரம் நடத்திய அதிரடி சோதனையில் சந்தேக நபர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை சனிக்கிழமை (மே 24) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

பிடிபட்டவர்கள் 850க்கும் அதிகமான புகார்களை எதிர் நோக்குகின்றனர். நண்பர்களைப் போல நடித்து ஏமாற்றுவது, முதலீடு. வேலை, இணைய வர்த்தகம் உள்ளிட்ட மோசடி வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் அவர்களிடம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, உரிமம் இல்லாமல் கடன் கொடுத்தது உள்ளிட்ட பிரிவிகளின் கீழும் குற்றம் புரிந்த சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுகின்றனர்.

மோசடிக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டும்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றினால் 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்பட்டும்.

குறிப்புச் சொற்கள்