அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலுக்கு $15 மில்லியன் மேம்பாடு

2 mins read
2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தெம்பனிஸ் வடக்கில் புதிய பள்ளிவாசல் கட்டப்படும்
d488f9ce-635a-42cf-833c-b8debe589397
முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் (வலது) சமூகத்துடனான தனது ஈடுபாட்டின் ஒரு பகுதியாக அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார். - படம்: பெரித்தா ஹரியான்

பிடோக் வடக்கில் உள்ள அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இது 15 மில்லியன் வெள்ளி செலவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானப் பணிகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தெம்பனிஸ் வடக்கில் ஒரு பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கி 2029ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 25அன்று அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலுக்கு வருகை புரிந்த முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அல்காஃப் கம்போங் மலாயு பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 26 மாதங்களில் இரண்டு கட்டங்களாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) ஜூலை 25ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்தப் பணிகள் 30 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலில் தடையற்ற வசதிகள் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கும்.

மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்தில், பள்ளிவாசல் நாள்தோறும் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக செயல்படும். அப்போது சுமார் 1,000 தொழுகையாளிகளுக்கு மட்டுமே இடவசதி இருக்கும் என்று முயிஸ் மேலும் கூறியது.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெம்பனிஸ் வடக்கில் ஒரு பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும்.

தெம்பனிஸ் நார்த் டிரைவ் 5ல் அமைந்துள்ள புதிய பள்ளிவாசலின் வடிவமைப்பு மேம்பாடு 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும் என்று பேராசிரியர் ஃபைஷால் அறிவித்தார்.

நமது தெம்பனிஸ் நடுவத்துக்கு அடுத்து அமைந்துள்ள பள்ளிவாசலில் 5,500 தொழுகையாளர்கள் வரை வழிபாடு நடத்த முடியும். இருப்பினும், வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின்போது இரண்டு முதல் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டியிருப்பதால் அது மிகவும் சிரமப்படுவதாக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கடந்த மார்ச் மாதம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்