சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று 151 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 42 பேரங்காடிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
105 பேரங்காடிகள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்று செவ்வாய்க்கிழமையன்று ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
கிளார்க் கீ, ஜுவல் சாங்கி விமான நிலையம், சாங்கி விமான நிலையம் முனையம் 3, பெல்மோரல் பிளாசா ஆகிய இடங்களில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் வழக்கம் போல் இயங்கும்.
சிங்கப்பூர் முழுதும் மொத்தம் 164 பேரங்காடிகளை ஃபேர்பிரைஸ் குழுமம் நடத்துகிறது.
ஜனவரி 27ஆம் தேதியன்று ஆறு ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடிகள் அவற்றின் திறப்பு நேரத்தை பின்னிரவு 2 மணிவரை நீட்டிக்கும்.
68 ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடிகள் 24 மணி நேரமும் இயங்கும்.
சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளான ஜனவரி 28ஆம் தேதியன்று 35 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் 24 மணி நேரமும் இயங்கும். 128 பேரங்காடிகள் மாலை 5 மணிக்கு மூடப்படும்.
புளோக் 212 பிடோக் நார்த்தில் உள்ள பேரங்காடி இரவு 11 மணிக்கு மூடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 30ஆம் தேதியன்று அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளின் திறப்பு நேரம் வழக்கநிலைக்குத் திரும்பும்.

