சிங்கப்பூரில் எச்ஐவி கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை 200க்குக் கீழ் பதிவாகி உள்ளது.
2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 151 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டின் 209 எச்ஐவி தொற்றுச் சம்பவங்களைக் காட்டிலும் அது குறைவு.
இதற்கு முன்னர் 1998ஆம் ஆண்டு 199 புதிய எச்ஐவி கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாயின. அதன் பிறகு அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
2009ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு 300 முதல் 500 வரையிலான எச்ஐவி கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின.
அதன் பிறகு அந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது.
2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 200 முதல் 250 வரையிலான தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
இந்நிலையில், அண்மைய நிலவரம் குறித்த விவரங்களை தொற்றுநோய் முகவை செவ்வாய்க்கிழமை (மே 20) அறிவித்தது.
அதன்படி, கடந்த ஆண்டு 151 புதிய எச்ஐவி சம்பவங்கள் பதிவாயின.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் தொற்றுக்கு ஆளானோரில் 141 பேர் ஆண்கள்.
அவர்களில், 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட ஐவரும் அடங்குவர்.