சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 17ஆம் தேதி, 156 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 42 பேரங்காடிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
113 பேரங்காடிகள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்று திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 2) ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
சிங்கப்பூரில் மொத்தம் 168 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் உள்ளன.
பிப்ரவரி 18ஆம் தேதியன்று அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளின் திறப்பு நேரம் வழக்க நிலைக்குத் திரும்பும்.
சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாள் (பிப்ரவரி 16), 36 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் 24 மணி நேரமும் செயல்படும். மற்றவை மாலை 5 மணிவரை செயல்படும்.
பிப்ரவரி 12 முதல் 15ஆம் தேதி வரை ஹவ்காங் ஒன், ஜெம், காலாங் வேவ் மால், விவோசிட்டி உள்ளிட்ட ஆறு ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடிகள் அவற்றின் திறப்பு நேரத்தைப் பின்னிரவு 2 மணிவரை நீட்டிக்கும்.
ஃபேர்பிரைஸ் இணையத்தளம் மூலமும் வாடிக்கையாளர்கள் பொருள்களைத் தொடர்ந்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பேரங்காடிகளின் செயல்பாட்டு நேரம் தொடர்பான மேல் விவரங்களை ஃபேர்பிரைஸ் இணையப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

